கனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து பிரபல சீரியல் நடிகர் ரியோ வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார் என்று ஏற்கனவே தக்வல்கள் வெளியாகி இருந்தது.
இதுவரை நடிகராகவும், பாடகராகவும்,தயாரிப்பாளராகவும் இருந்து வந்த சிவகார்த்தியேனுக்கு தற்போது இயக்குனராகவும் அவதாரமெடுக்க ஆசை வந்துள்ளது. அதிலும் யாரை வைத்து என்று தெரிந்தால் ஆடிப்போவீர்கள்.
சமீபத்தில் சிவகார்த்திகேயன், விருது விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் இவரும் நடிகர் விக்ரமும் சேர்ந்து சிறிது நேரம் நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறிறிருந்தார்.
அப்போது விக்ரம் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் உருவெடுப்பார் என கூறினார். அதற்கு சிவகார்த்திகேயன் அப்படி நான் இயக்குநரானால் விக்ரமை தான் இயக்குவேன் என்று கூறியுள்ளார்.