‘எனக்கு நடிக்க விருப்பமில்லைனு எவ்வளவோ மறுத்தேன்’ – தனுஷ் படத்தில் நடித்தது குறித்து வேலாயுதம் பட நடிகை.

0
951
saranya
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக இருந்தவர் சரண்யா மோகன். இவர் அதிகம் தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் தான் நடித்துள்ளார். சரண்யா கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் இடத்தில் பிறந்தவர். இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் தோன்றி பின் கதாநாயகியாக பல படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் விஜய் மற்றும் ஷாலினியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த படம் காதலுக்கு மரியாதை. அதில் வரும் ஆனந்த குயிலின் பாட்டு இடையே சைலன்ஸ் என்று சொல்லி கியூட் பேபி சரண்யா நடமாடினார். இது தான் இவருடைய முதல் படம். அதற்குப் பின் இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவருடைய க்யூட் சிரிப்பாலும் குழந்தைத்தனமான ரியாக்சனாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார் என்று சொல்லலாம். திருமணம் ஆனதும் சரண்யா மோகன் சினிமாவில் இருந்து விலகி குடும்ப பொறுப்பை கவனித்து வருகிறார். இருந்தாலும் இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சரண்யா சினிமாவில் நடிக்கப்போகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார்.

- Advertisement -

சரண்யா மோகன் அளித்த பேட்டி:

அதில் அவர் கூறியிருப்பது, நான் விவரம் தெரியாத பருவத்திலிருந்து சினிமாவில் நடித்து இருக்கிறேன். பிறகு சினிமாவை முழுவதுமாக மறந்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தினேன். பதினோராம் வகுப்பு படிக்கும்போது ‘ஒரு நாள் ஒரு கனவு’ என்ற படத்தில் மறுபடியும் என்னை நடிக்க சொன்னார் என் குருநாதர். அவர் சொன்னதை என்னால் மறுக்க முடியவில்லை. அதனால் நடித்தேன். பின் அந்த படம் ரிலீஸ் ஆனதுமே யாரடி நீ மோகினி படத்தோட புரடக்ஷன் டீம் என்னிடம் நடிக்க பேசினார்கள்.

யாரடி நீ மோகினி பட அனுபவம்:

ஆனால், எனக்கு நடிக்க விருப்பமில்லை என்று எவ்வளவோ மறுத்தும் சும்மா ஸ்க்ரீன் டெஸ்ட்க்கு வாங்க என்று சொன்னார்கள். ஸ்கிரீன் டெஸ்டில் நிறைய பெண்கள் காத்திருந்தார்கள். அதனால் எனக்கு வாய்ப்பு கிடைக்காது என்று சந்தோஷப்பட்டு போனேன். ஆனால், என்னை அந்த படத்தில் நயன்தாரா அக்காவுடன் தங்கச்சி ரோலில் நடிக்க உறுதி செய்து விட்டார்கள். பின் அன்பு கட்டளையால் அந்த படத்தில் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

-விளம்பரம்-

சரண்யா நடித்த படங்கள்:

அந்த பட ஷூட்டிங்கில் தான் நயன்தாரா அக்காவை முதன் முறையாக பார்த்தேன். மேலும், ரெண்டு பேரும் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதால் எங்களுக்கு மத்தியில் பழக்கம் நெருக்கமானது. அந்த படத்தில் தனுஷ் சார் கிட்ட லவ் ப்ரொபோஸ் பண்றது தான் என்னுடைய சீன். நான் நடித்த படங்களிலேயே முதன்முறையாக அந்தப் படத்தில் தான் எனக்கு டூயட் பாடல் கொடுத்தார்கள். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து எனக்கு பல படங்களில் வாய்ப்பு வந்துகொண்டிருந்தது. பின் காலேஜ் படிப்பு, நடிப்பு என்ற இரண்டையும் பேலன்ஸ் பண்ணி கொண்டு வந்தேன்.

சரண்யா மோகன் குடும்பம்:

என்னுடைய கணவர் அரவிந்த் கிருஷ்ணன் பல் மருத்துவர். எங்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறது. குடும்பம் குழந்தைகள் என்று பிஸியாக இருப்பதால் சினிமாவில் என்னால் நடிக்க முடியாமல் போனது. தற்போது என் குழந்தைகள் வளர்ந்து இருப்பதால் மீண்டும் சினிமாவில் நடிக்கலாம் என்று இருக்கிறேன். இதற்கு என் குடும்பமும் சப்போர்ட்டாக இருக்கிறது. கூடிய விரைவில் பாசிட்டிவான தகவல் சொல்கிறேன் என்று கூறியிருந்தார்.

Advertisement