‘அப்போ நீங்க போய் விளையாடுங்க’ – இந்திய அணி தோல்வி குறித்து பதிவிட்ட சரத்குமாரை கேலி செய்த நெட்டிசனுக்கு அவர் கொடுத்த பதிலடி.

0
971
sarath
- Advertisement -

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து  மோசமாகத் தோல்வி அடைந்ததிற்கு நடிகர்  சரத்குமார் காட்டமாகக் கருத்து தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் t20 உலகக்கோப்பை தொடரில் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை கண்டு ஏமாற்றத்தை அளித்தது. அதனை தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது லீக் போட்டியிலாவது வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்ற இந்த இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி மிக மோசமான தோல்வியை சந்தித்தது.

-விளம்பரம்-

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 110 ரன்கள் மட்டுமே அடிக்க அதனை நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 15 ஓவர்களில் சேஸிங் செய்து அபார வெற்றி பெற்றது. மேலும் இந்திய அணியின் தற்போதைய ரன்ரேட் மிகவும் சரிந்துள்ளதால் அடுத்த மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட அரையிறுதிக்கு முன்னேறுவதில் பெரிய சிக்கல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணி தற்போது அரையிறுதி வாய்ப்பை நழுவ விடும் நிலைக்கு சென்றுள்ளது.இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணி பெற்ற தோல்விக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் வருகின்றன. அந்த வகையில் பிரபல நடிகரான சரத்குமார் இந்திய அணியின் தோல்வி குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் படு கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவவிட்டுள்ள அவர், “நமது அணியின் அவமானகரமான, இரண்டாம் தர, பொறுப்பற்ற ஒரு ஆட்டம். நமீபியா, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளால் நாம் அவமானப்படுத்தப்படும் முன் அவர்கள் வெளியேறிவிட வேண்டும். மற்றவர்கள் அனைவரும் தங்கள் நாட்டுக்காக விளையாடுகின்றனர். டி20 ஆட்டத்தை நன்றாகத் தெரிந்து வைத்துள்ளது போல் தெரிகிறது. நமது ஆட்கள் ஐபிஎல் ஆடட்டும்” என்று பதிவிட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

சரத்குமாரின் இந்த பதிவிற்கு பல்வேறு விமர்சனங்கள் குவிந்து வருகிறது. அதில் ஒருவர் அடடே கோச்/மெண்டார் சார் நீங்களா என்று கேலியாக பதிவிட்டிருந்தார் இதற்கு பதிலளித்த சரத்குமார் ஒரு உண்மையான இந்தியராக நம்முடைய உணர்வுகள் இதில் இருக்கிறது. இது அவர்களை காயப்படுத்தினாலும் கூட அவர்கள் இதன்பின்னர் ஒழுங்காக விளையாடவேண்டும் என்று பதிலளித்திருக்கிறார்..

Advertisement