அடிக்கடி விமர்சிக்கப்படும் ராதிகாவின் முன்னாள் திருமணங்கள் – சரத் குமார் கொடுத்த நச் பதில்.

0
1858
Radhika
- Advertisement -

ராதிகாவின் மறுமணம் குறித்து நடிகர் சரத்குமார் முதன் முதலாக மனம் திறந்து அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா திரை உலகில் 90 காலகட்டங்களில் முன்னனி நடிகராக திகழ்ந்தவர் சரத்குமார். தற்போது இவர் அரசியல்வாதியாகவும் சிறந்து விளங்கி வருகிறார். சரத்குமார் அவர்கள் நடிகர், அரசியல்வாதி, இயக்குனர், தயாரிப்பாளர், பாடி பில்டர் என பன் முகங்களை கொண்டவர். இவர் இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் பல படங்களிலும் நடித்து இருக்கிறார். இதனிடையே நடிகர் சரத்குமார் கடந்த 1984 ஆம் ஆண்டு சாயா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இவர்கள் 2000 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார்கள். இவர்களுக்கு பிறந்தவர்கள் தான் வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பூஜா. பின் சரத்குமார் நடிகை ராதிகா அவர்கள் மலையாள மற்றும் தமிழ் திரைப்பட முன்னாள் நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தனை திருமணம் செய்து இருந்தார்.

- Advertisement -

சரத்குமார் அளித்த பேட்டி;

அதன் பின்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சார்டு ஹார்டி என்பவரை திருமணம் செய்தார். அதற்கு பின் தான் இவர் சரத்குமாரை திருமணம் செய்தார். மேலும், ராதிகாவின் திருமணம் குறித்து இணையத்தில் பல சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் சரத்குமார் அவர்கள் பிரபல youtube சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், தன்னுடைய மனைவியின் மறுமணம் குறித்து கூறியிருந்தது, எல்லோருடைய வாழ்க்கையிலும் பாதிப்புகள், பிரச்சனைகள் இருக்கலாம். அதை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.

காதல் கதை குறித்து சொன்னது:

நம்மோடு ஒருவர் உறவில் இருக்கும் போது அவர்களுடைய கடந்த வாழ்க்கையை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. நடிகராக இருக்கும் போது என்னுடைய காதல் கதைகளை நான் ராதிகாவிடம் நிறைய சொல்லி இருக்கிறேன். அப்போது, அவர் என் மனைவியாக வருவார் என்பது எனக்கு தெரியாது. அவரும் என்னை அப்படி பார்த்ததில்லை. என்னை அவர் ஒரு நண்பனாக தான் பார்த்தார். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் நாங்கள் இருவரும் நண்பர்களாக இருந்தோம். அரவிந்த்சாமி கூட கோபப்பட்டு, நீங்க ரெண்டு பேரும் எனக்கு தெரியாம காதலிச்சு இருக்கீங்க? இடையில் நான் இருந்திருக்கின்றேன். நீங்கள் இருவரும் என்னை கோமாளியாக்கி இருக்கீங்க. எனக்கு தெரியாம உங்க ரெண்டு பேருக்குமே கல்யாணமா? என்றெல்லாம் பேசி இருந்தார்.

-விளம்பரம்-

மறுமணம் குறித்து சொன்னது:

அந்த அளவிற்கு எங்கள் இருவருக்கும் மத்தியில் இருந்த காதல் யாருக்கும் தெரியாது. இதனைத்தொடர்ந்து என்னுடைய கடந்த காலம் பற்றி அனைத்துமே நான் ராதிகாவிடம் கூறியிருக்கிறேன். உண்மையான காதல், நட்பு எப்போதும் காம்ப்ரமைஸ் ஆகிவிடும். கடந்த காலத்தை சுட்டிக் காட்டி நாங்கள் எப்பொழுதும் சண்டை போட்டதே கிடையாது. திருமணமான பின்பு, என் மனைவியிடம் நான் கடந்த காலத்தை பற்றி கேட்கக் கூடாது என்று என் அப்பா என்னிடம் கூறியிருந்தார். உண்மையில் அவர் ஒரு தீர்க்கதரிசி. மனைவியின் கடந்த காலம் தெரிந்தால் என்றாவது ஒரு நாள் நீங்களே தவறி அதை வார்த்தைகளாக விட்டுவிடுவீர்கள் என்று கூறுவார். ஆகையால் நானும் ராதிகாவும் கடந்த காலத்தை பற்றி பேச மாட்டோம்.

சோசியல் மீடியா சர்ச்சை குறித்து சொன்னது:

மேலும், சமூக வலைத் தளங்களில் எங்களை பற்றி வரும் வதந்திகளையும் நாங்கள் கண்டு கொள்ள மாட்டோம். அவன் ஏதோ போட்டு, அதை ஜாலியா எடுத்துக்கிறான். அதை போய் நாம் ஏன் கண்டு கொள்ள வேண்டும். அப்படி போடுவர்களை வக்கிரம் புத்தி இருப்பவர்கள் என்று தான் நாங்கள் நினைத்துக் கொள்வோம். கடந்த காலத்தை அசிங்கப்படுத்தக் கூடாது. இப்ப காலம் மாறிப் போகிவிட்டது. சமூக வலைத்தளங்கள் எதையாவது சொல்லிக் கொண்டே தான் இருக்கும். அதை பற்றி எல்லாம் கண்டு கொள்ளாமல், நம்முடைய வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement