பாஜகவில் இணைந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் – இதற்கு காரணம் ராதிகாவா? அவரே கொடுத்த விளக்கம்

0
714
- Advertisement -

என்னுடைய மனைவியின் பேச்சைக் கேட்டு தான் பாஜகவில் இணைந்தேன் என்று நடிகரும், சமத்துவ கட்சித் தலைவர் சரத்குமார் அளித்து இருக்கும் பேட்டி தான் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சோசியல் மீடியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் குறித்த செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் குறித்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

-விளம்பரம்-

அதோடு திமுக கட்சியுடன் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் இணைந்து இருக்கிறார். இது குறித்து கடந்த வாரம் கமலஹாசன் அவர்கள் பேட்டியும் அளித்திருந்தார். இந்த நிலையில் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் சரத்குமார் இணைந்து இருக்கிறார். இது தொடர்பாக சென்னை தி நகரில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி தலைமை அலுவலகத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் இன்று சென்றிருக்கிறார்.

- Advertisement -

பாஜக- சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி:

அங்கு சரத்குமார் உடன் சேர்ந்து அண்ணாமலை ஆலோசனையும் நடத்தி இருக்கிறார். அதற்கு பிறகு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தன்னுடைய கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் அவர்
சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்து கொண்டிருப்பதாக அறிவித்தார். பாஜகவுடன் சமத்துவக் கட்சி இணைந்தது முடிவு கிடையாது. மக்கள் பணிக்காக தொடக்கம். நாட்டின் வளர்ச்சிக்காகவும், இளைஞர்களின் வளர்ச்சிக்காகவும் தான் இந்த முடிவு.

சரத்குமார் பேட்டி:

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்க சமத்துவ கட்சி தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்று கூட்டத்தில் கூறியிருக்கிறார். இதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்து சரத்குமாருக்கு பேட்டியும் அளித்திருக்கிறார். அதில் அவர், இரவு இரண்டு மணி இருக்கும். அந்த நேரத்தில் நான் என்னுடைய மனைவியை எழுப்பி எனக்கு பாஜகவுடன் இணைய தோன்றுகின்றது என்று கூறினேன். உடனே என்னுடைய மனைவி ராதிகா, நீங்கள் எந்த ஒரு முடிவு எடுத்தாலும் நான் உங்களோடு உறுதுணையாக இருப்பேன் என்று சொன்னார். இதனால் பாஜகவுடன் சமத்துவ கட்சியை இணைத்து விட்டோம் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

சரத்குமார் குறித்த தகவல்:

தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னனி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் சரத்குமார். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதி, இயக்குனர், தயாரிப்பாளர், பாடிபில்டர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். ஆரம்பத்தில் இவர் படங்களில் வில்லன் வேடத்தில் தான் நடித்து இருந்தார். அதன் பின் இவர் ஹீரோவாக கலக்கி இருக்கிறார்.

சரத்குமார் அரசியல்:

மேலும், இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும் ஆவார். அதோடு சமீப காலமாகவே இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் பரம்பொருள், நிறங்கள் மூன்று போன்ற பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். மேலும், இவர் நடிகர் என்பதை தாண்டி அரசியல்வாதியும் ஆவார். அகில இந்திய சமத்துவ கட்சியை இவர் நடத்தி வருகிறார்.

Advertisement