நான் சிறையில் எல்லாம் பாடம் நடத்தவில்லை – Reallife Jd அளித்த பேட்டி இதோ. அட, எப்படி இருக்கார் பாருங்க.

0
999
master
- Advertisement -

மாஸ்டர் படத்தில் விஜய் நடித்த ஜே டி கதாபாத்திரம் குறித்து பலரும் அறிந்திடாத சுவாரஸ்யமான தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் விஜய்யின் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த படம் மாஸ்டர்.

-விளம்பரம்-

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இந்த படத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருந்தார். பல பிரச்சனைகளுக்கு பின் விஜய்யின் மாஸ்டர் படம் வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிங்கர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டும் இல்லாமல் அதிக வசூலையும் பெற்று இருந்தது.

- Advertisement -

மாஸ்டர் படம்:

மேலும், மாஸ்டர் படத்தில் விஜய் அவர்கள் பேராசிரியர் JD கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த கதாபாத்திரம் நக்கல், நையாண்டி கலந்த மாதிரியான கதாபாத்திரம். விஜய் வரும் சீன்கள் எல்லாமே கெத்தாகவும் இருக்கும். விஜயின் இந்த கதாபாத்திரம் இளைஞர்கள் மத்தியில் அதிகமாகவே வரவேற்கப்பட்டிருந்தது என்று சொல்லலாம். இந்த நிலையில் விஜய் நடித்திருக்கும் ஜேடி கதாபாத்திரம் உண்மையிலேயே ஒரு பேராசிரியரின் கதை என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜேடி குகன் அளித்த பேட்டி:

அதாவது, தற்போது பேராசிரியராக இருக்கும் ஜே டி குகன் உடைய கதை தான் விஜய் மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறார். இது தொடர்பாக ஜேடி குகன் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், மாஸ்டர் படத்தில் என்னை மாதிரி ஒரு கதாபாத்திரம் வருவது குறித்து என்னிடம் போனில் ரத்தினம் என்பவர் பேசியிருந்தார். நான் அவர்தான் இந்த படத்தின் இயக்குனர் என்று நினைத்தேன். அதற்குப் பிறகு லோகேஷ் பத்தி சொன்னார்கள். பெருசா அவர்களுடைய படத்தை எதுவும் பார்க்கவில்லை.

-விளம்பரம்-

விஜய் குறித்து சொன்னது:

பின் இந்த படம் பெரிய பட்ஜெட். இதில் விஜய் சார் நடிக்கப் போகிறார் என்றெல்லாம் தெரிந்து கொண்டேன். விஜயை அவர்கள் ஒரு மாணவராக நடிப்பார் என்று பார்த்தேன். ஆனால், அவர் என்னுடைய ரோலில் நடிக்கப் போகிறார் என்பதை கேட்டவுடன் சந்தோஷமாக இருந்தது. பின் எப்படி மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் எந்த மாதிரியான சில டெக்னிக்ஸ்கள், மாடுலேஷன் எல்லாமே சொல்லிக் கொடுத்தேன். அதேபோல் படத்தில் சிறையில் சென்று பாடம் நடத்துவார் விஜய். நான் அப்படி செய்யவில்லை.

சொல்லி கொடுக்கும் விதம்:

நான் சிறையில் இருந்து வரும் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். வழக்கமான பேராசிரியர்கள் போல் மாணவர்கள் செய்யும் கிண்டல் கேலிக்கு கோபப்படாமல் அவர்களுக்கு ஏற்ற மாதிரி பதில் கொடுப்பதுதான் என்னுடைய டெக்னிக் என்று பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். தற்போது இவர் பேசியிருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்திற்கு பிறகு இந்த படத்தில் மீண்டும் விஜய்- லோகேஷ் உடைய கூட்டணி இணைந்திருக்கிறது.

Advertisement