சரவணன்-மீனாட்சி சீரியல் புகழ் செந்தில்-ஸ்ரீஜா வீட்டில் சூப்பர் விவேஷம் – புகைப்படம் இதோ.

0
2512
senthil
- Advertisement -

‘சரவணன் மீனாட்சி’ என்ற தொடரின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகர் செந்தில். இவர் முதன் முதலாக ரேடியோ மிர்ச்சியில் ஆர்ஜே வாக தான் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான தொடர்களில் புகழ் பெற்ற சீரியலாக இருந்தது “சரவணன் மீனாட்சி”. இந்த சரவணன் மீனாட்சி தொடரில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகர் செந்தில். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஸ்ரீஜா.

-விளம்பரம்-

சின்னத்திரையில் சூப்பர் ஜோடியாக கலக்கிய இவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையிலும் கணவன், மனைவியாக ஒன்று சேர்ந்தனர். சரவணன் மீனாட்சி சீரியலுக்கு பிறகு செந்திலுக்கு சினிமாவில் நடிக்க பட வாய்ப்புகள் வந்தது. இவர் தவமாய் தவமிருந்து, செங்காத்து பூமியிலே, கண்பேசும் வார்த்தைகள், வெண்ணிலா வீடு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : லிவிங் டு கெதர் வாழ்க்கை, குழந்தை, விவாகரத்து – சிந்து துலானி வாழ்க்கையில் நடந்த பரிதாபம்.

- Advertisement -

ஆனால், சினிமாவில் இவருக்கு பெரிய அளவு மக்கள் மத்தியில் ரீச் கிடைக்காததால் மீண்டும் சின்னத் திரை நோக்கிய பயணம் செய்ய தொடங்கினார். பின்னர் மீண்டும் இவர் தன் மனைவியுடன் இணைந்து ‘மாப்பிள்ளை’ என்ற தொடரில் நடித்தார். அதுவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திருமணத்துக்கு பிறகும் இவர்கள் இருவரும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்கள்.

தற்போது செந்தில் “நாம்-இருவர்-நமக்கு-இருவர்” என்ற தொடரில் நடிக்கிறார். அதுவும் இந்த தொடரில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இந்த சீரியலில் நடிகர் செந்தில் அவர்கள் ‘மாயன் (ரவுடி), அரவிந்த் ( மருத்துவர்)’ என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் ஸ்ரீஜாவின் தங்கைக்கு அவர்களது சொந்த ஊரில் திருமணம் நடந்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement