சீரியலில் நடிக்கவந்த சூப்பர் சிங்கர் புகழ் மூக்குத்தி முருகன் – எந்த சீரியலில் தெரியுமா ? இதோ புகைப்படம்.

0
1175
murugan
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆக மூக்குத்தி முருகன் தேர்ந்து எடுக்கப்பட்டார். மேலும், இவர் டைட்டில் பட்டத்தை பெற்றால் என்னவெல்லாம் செய்வதாக மூக்குத்தி முருகன் கூறிய விஷயங்கள் எல்லாம் பார்க்கலாம். மேலும்,விஜய் டிவியில் பல ஆண்டுகளாகவே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அதிலும் இந்த வருடம் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சி கடந்த சில மாதங்களாகவே மக்களிடையே நல்ல வரவேற்பையும், ஆதரவையும் பெற்று வந்தது.இந்நிலையில் இறுதிச்சுற்றுக்கு மூக்குத்தி முருகன், விக்ரம், சாம் விஷால், புண்ணியா,கவுதம் ஆகியோர் பைனலுக்கு தகுதி பெற்றவர்கள்.

-விளம்பரம்-

அதோடு இறுதிச்சுற்று கிராண்ட் ஃபினாலே கோவையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் அனிருத் அவர்களும், பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகென் ராவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். இதில் ஒவ்வொரு போட்டியாளரும் தலா இரண்டு பாடல்களை பாட வேண்டும். அதன் படி ஆரம்பத்திலேயே மூக்குத்தி முருகன் அவர்கள் ‘எங்கே நிம்மதி’ பாடலையும், இரண்டாவதாக பில்லா படத்தில் ‘வெத்தலையை போட்டேண்டி’ என்ற பாடலையும் பாடி அரங்கையே அதிர வைத்தார்.

இதையும் பாருங்க : சரவணன்-மீனாட்சி சீரியல் புகழ் செந்தில்-ஸ்ரீஜா வீட்டில் சூப்பர் விவேஷம் – புகைப்படம் இதோ.

- Advertisement -

பின் வரிசையாக விக்ரம், சாம் விஷால், புண்ணியா,கவுதம் ஆகியோரும் பாடல்களை பாடினார்கள். மேலும், இந்நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கரின் டைட்டில் வின்னர் ஆக மூக்குத்தி முருகன் அறிவிக்கப்பட்டார். இவருக்கு அனிருத் இசையில் பாட வாய்ப்பும், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடும் பரிசாக அறிவிக்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இவர் விஜய் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலில் தான் மூக்குத்தி முருகன் சிறப்பு விருந்தினராக என்ட்ரி கொடுத்துள்ளார். அந்த எபிசொட் நாளை ஒளிபரப்பாக இருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தகளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement