திருநெல்வேலி-கன்னியாகுமாரியில் சர்கார் படம் செய்த சாதனை..!தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறை..!

0
484
Sarkar

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான சர்கார் படம் தீபாவளி பண்டிகையன்று வெளியாகி இருந்தது. படம் கலவையான விமர்சனத்தை பெற்றபோதும் பல வசூல் சாதனைகளை செய்து வருகிறது.

Sarkar100crore

சென்னையில் பல்வேறு திரையரங்குகளில் வெளியான இந்த படம் சென்னையில் மட்டும் ஒரே நாளில் 2.37 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதுவரை வந்த படங்களிலேயே ஒரு நாளிலேயே 2 கோடி ரூபாய் வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றது.

அதே போல ஒரே நாளில் 35 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்து பாலிவுட்டில் தீபாவளி அன்று வெளியான சஞ்சு திரைப்படத்தின் வசூல் சாதனையை முறியடித்து. மேலும் இரண்டாம் நாள் வசூலில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்து.

இந்நிலையில் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமாரி பகுதிகளில் வெளியான சர்கார் படம் ஒரே நாளில் 2 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. இதுவரை வந்த தமிழ் சினிமாக்களிலேயே இந்த பகுதிகளில் ஒரே நாளில் 2 கோடி ரூபாய் வசூல் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.