ரசிகரை கடுமையாக விமர்சித்த கோலி…!அறிவுரை கூறியுள்ள பி சி சி ஐ …!

0
661
Kohli
- Advertisement -

இந்திய அணியின் ரன் மெஷின் என்றழைக்கபடும் கோலி, தன்னை விமர்சித்த ரசிகர் ஒருவரை நாட்டை விட்டு போய்விடுங்கள் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோலியின் இந்த செயலுக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-

சமீபத்தில் ரசிகர் ஒருவர் சிறப்பாக இல்லை. விராட் அதிகமாக விளம்பரப்படுத்தப்படுகிறார். அவருடைய பேட்டிங்கில் எதுவும் எனக்கு இந்தியர்களை விட இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தைக் காணவே பிடிக்கும்,” என தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இதற்கு வீடியோ மூலம் பதிலளித்த கோலி,மற்ற நாடுகளை நேசித்தால், அப்போது எதற்கு நமது நாட்டில் இருக்கிறாய்?நீ இந்தியாவில் வாழக்கூடாது என நான் நினைக்கிறேன். வேறு எங்காவது போய் வாழ்க்கை நடத்து என்று காட்டமாக பதிலளித்திருந்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கோலியின் இந்த செயலுக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தில் இருக்கும் சில முக்கிய உறுப்பினர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். கிரிக்கெட் வாரியம் ரசிகர்களை மதிக்கிறது. அவர்களின் தேர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

-விளம்பரம்-

ரசிகர்களை வெளிநாட்டுக்கு செல்ல சொல்லும் விராத் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இல்லை யென்றால், புமா (Puma) போன்ற நிறுவனங்கள் நூறு கோடி ரூபாய்க்கு அவரிடம் ஒப்பந்தம் செய்ய விரும்பாது. சர்வதேச நிறுவனங்கள் விளம்பர ஒப்பந்தங்களை நிறுத்தினால், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருமானம் வீழும். அது வீரர்களின் ஊதியத்தையும் பாதிக்கும். இப்படி கூறியிருப் பதன் மூலம் தனது ஒப்பந்தத்தையும் கோலி மீறியிருக்கிறார். விராத் சிறந்த வீரர் அவர் சிறந்த மனிதராகவும் மாறவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Advertisement