“மெர்சலை பட” பாடல்களை மிஞ்சும் இந்தப்படத்தின் பாடல்கள்..! பாடலாசிரியர் விவேக்

0
800
vivek
- Advertisement -

இளையதளபதி விஜய் நடித்துள்ள “சர்கார் ” படத்திற்காக தான் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வருடம் அக்டோபர் மாதம் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவை வெகு விமர்சியாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது. அந்த விழாவில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் லைவ் பேர்பார்மன்ஸ் ஒன்றை கொடுக்க போகிறாராம்.

-விளம்பரம்-

sarkar

- Advertisement -

இந்நிலையில் இந்த இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் தான் எழுதியுள்ளார் என்ற தகவலை சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பாடலாசிரியர் விவேக் ‘நான் தான் ‘சர்கார்’ படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதி வருகிறேன். ஏ ஆர் ரஹமானிற்காக பாடல் எழுதுவது எனக்கு கிடைத்த மிக பெரிய பாக்கியாமாக கருதுகிறேன். மேலும், எனக்கு தூணாக இருந்த நடிகர் விஜய்க்கும் நான் நன்றி கூற வேண்டும். ஏ ஆர் முருகதாசுடன் வேலை செய்வது மிகவும் சிறப்பான அனுபவம்” என்று பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து பாடலாசிரியர் விவேக்கை சமூக வலைத்தளத்தில் துரத்தி வரும் ரசிகர்கள் “சர்கார்” படத்தின் ஏதாவது ஒரு பாடலின் வரிகளையாவது சொல்லுங்கள் என்று அன்பு தொல்லை செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் “சர்கார் ” படத்தின் பாடல் வரிகளை கூறுமாறு கேட்டிருந்தார், அதற்கு பதிலளித்த பாடலாசிரியர் விவேக் “கேட்டுக்கிட்டே இருந்தா மனசு கேக்காம சொன்னாலும் சொல்லிடுவேன்”. சன் பிக்சர்ஸ் கேட்டா உங்க ஐடி தான் கொடுப்பேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

Sarkar

ஏற்கனவே விஜய் நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியான ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற பாடலாசிரியர் விவேக் எழுதிய அணைத்து பாடல்களும் மாபெரும் ஹிட்டானது. அதிலும், அந்த படத்தில் இடம்பெற்ற ‘ ஆளப்போறான் தமிழன்’ அடைந்த வெற்றி நாம் அனைவரும் அறிவோம். எனவே, ‘மெர்சல்’ படத்தை போன்றே ‘சர்கார்’ படத்திலும் இவர் எழுதியுள்ள பாடல் வரிகள் மக்களை கவரும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement