சசி குமாரை கைது செய்த மும்பை போலீசார்.! கைப்பற்றிய தமிழர்கள்.!

0
695
sasi-kumar

இயக்குனர் மற்றும் நடிகருமான தற்போது நாடோடிகள் 2 படத்தில் நடித்து வருகிறார் இதை தொடர்ந்து சுசீந்திரன் இயக்கும் கென்னடி கிளப் படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது. தற்போது நிர்மல் குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். 

Image result for sasikumar

பெயரிடபடாத இந்த புதிய படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள மும்பை தெருக்களில் இதன் படப்பிடிப்பை நடத்தினர். அங்கு சண்டை காட்சியொன்று படமாக்கப்பட்டது. பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கக்கூடாது என்பதற்காக கேமராவை மறைத்து வைத்து சண்டை காட்சியைபடமாக்கி வருகின்றனர்.  

- Advertisement -

அந்த காட்சியில் சசி குமார் வில்லன்களை விரட்டி சென்று சசிகுமார் தாக்குவதுபோன்று ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அதை பார்த்த அப்பகுதி மக்கள் உண்மையாகவே சண்டை போடுகிறார்கள் என்று கருதி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சசிகுமார் உள்ளிட்ட படக்குழுவினரை சுற்றி வளைத்தனர். 

Image result for sasikumar

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் விசாரித்ததில் பின்னர் அது படப்பிடிப்பு என்று போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், படக்குழுவினர் எவ்வளவோ சொல்லியும் போலீசார் நம்பவில்லை. அதன்பிறகு கேமரா மற்றும் சுற்றி நின்ற படப்பிடிப்பு தொழிலாளர்களை காட்டி அவர்களை நம்ப வைத்தார்கள்.

-விளம்பரம்-

இந்த நிலையில் அங்குள்ள தமிழர்கள் சசிகுமாரை அடையாளம் கண்டு திரண்டார்கள். சசிகுமாருடன் நின்று செல்பி எடுத்தனர். அவர்களுடன் சேர்ந்து நின்று சசிகுமார் செல்பிக்கு போஸ் கொடுத்தார். இந்த சம்பவத்தால் படப்பிடிப்பு தளத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement