கொரோனா பிரச்சனை காரணமாக இனி அது போன்ற காட்சியில் நடிக்க மாட்டேன் என்று கூறிய சசி குமார் பட நடிகை.

0
1411
lavanya
- Advertisement -

தற்போது, உலகமெங்கும் ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.’கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாகஇருந்து வந்தது.

-விளம்பரம்-
Lavanya Tripathi:

இது ஒருபுறம் இருக்க தற்போது சினிமா ஷூட்டிங்கின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மட்டும் துவங்கியுள்ளது, அதே போல சின்னத்திரை படப்பிடிப்புகள் 20 பேர்களை மட்டும் வைத்து இண்டோரில் நடத்திக்கொள்ளலாம் என்று விளக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சினிமா ஷூட்டிங் எப்போதும் முழுமையாக துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்னொரு ஷாக் தகவல் வந்திருக்கிறது.

- Advertisement -

பொதுவாகவே இப்போது இருக்கும் சுழலில் சினிமாவில் நெருக்கமான காதல் காட்சிகளும், முத்த காட்சிகளும் அதிக அளவில் படங்களில் இடம் பெறுகின்றது. தற்போது, நெருக்கமான காதல் காட்சிகளையும், முத்த காட்சிகளையும் ஷூட் செய்வதில் ஒரு சிக்கல் வந்திருக்கிறது. இதுகுறித்து பேசியுள்ள நடிகை லாவண்யா திருப்பதி கொரோனா தாக்கம் முடிந்தபின்பு படப்பிடிப்புகள் துவங்கினாலும் நிச்சயம் பல மாற்றங்கள் அதில் காணப்படும்.

lavanya

கட்டாயம் அரசு விதிக்கும் விதிமுறைகளை பின்பற்றித்தான் படப்பிடிப்பு நடக்கும் அதனால் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். நடிகை லாவண்யா திருப்பதி சசி குமார் நடித்த பிரம்மன் திரைப்படத்தில் நடித்தவர். அதன் பின்னர் தமிழில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் பிஸியான நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement