சசிகுமாருக்கு முதல் முறையாக ஜோடியாகும் விஜய் பட நடிகை.!

0
599
Sasikumar

இயக்குனரும் நடிகருமான சசி குமார் தற்போது “நாடோடிகள் 2 ” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் உருவாக உள்ள ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்திற்கு “கொம்பு வச்ச சிங்கம்” என்று தலைப்பை வைத்துள்ளனர்.

sasi

- Advertisement -

இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் ஏற்கனவே சசிகுமார் வைத்து “சுந்தர பாண்டியன்” என்ற படத்தை இயக்கியுள்ளார். 2012 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்திற்கு பின்னர் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கிய படங்கள் அனைத்தும் தோல்விப்படமாகவே அமைந்தது.

-விளம்பரம்-

தற்போது மீண்டும் சசிகுமாருடன் இணைத்துள்ளார் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன். மேலும், இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் பிக் பாஸ் ஆரவ், சூரி, யோகிபாபு போன்றவர்களும் நடிக்கவுள்ளனர்.

Actress keerthi suresh

இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிக விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படம் கிராமத்து கதைக்களம் கொண்ட படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. எனவே, படப்பிடிப்பிற்காக காரைக்குடி மற்றும் பொள்ளாச்சி போன்ற பகுதிகளை தேர்வு செய்துள்ளனராம்.

Advertisement