என் மனைவிக்கு பாதுகாப்பு அளியுங்க – புகார் கொடுத்த ரேவதியின் கணவர். நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு.

0
1518
revathi

சாத்தான்குளத்தில் நிகழ்ந்த தந்தை, மகன் மரணம் இந்தியா முழுவதும் கொழுந்து விட்டு எரிகிறது. ஊரடங்கை மீறி அதிக நேரம் கடைதிறந்து வைத்த காரணத்தினால் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்ஸை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்து ரத்தம் சொட்ட சொட்ட அடித்து உள்ளார்கள். காவல்துறையினர் கடுமையாக தாக்கியதால் இருவரும் அநியாயமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தேசிய அளவிலிருந்து கண்டனங்கள் எழுந்து உள்ளது. இந்தக் கொடூரமான சம்பவத்திற்கு கண்டனங்களை தெரிவித்து பலரும் தங்களுடைய கருத்துகளை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் மரணத்துக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Will speak the truths about Sathankulam brutality anywhere, says Police  officer Revathi! - Tamil News - IndiaGlitz.com

மேலும், இந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து கையில் எடுத்து விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளது. இதை தொடர்ந்து சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நேரில் சென்று நீதித்துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் தலைமை பெண் காவலர் ரேவதியின் வாக்குமூலம் முக்கிய சாட்சியாக எடுத்துக் கொள்ளப்பட்டது. ரேவதி தனது வாக்குமூலத்தில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் இரவு முழுவதும் லத்தியால் தாக்கப்பட்டனர் என்று கூறி உள்ளார்.

இதையும் பாருங்க : அச்சு அசலாக நயன் மாதிரி இருக்காங்களா. ஆனால், மேக்கப் இல்லாமல் பாத்தா ஷாக்காகிடுவீங்க.

- Advertisement -

தலைமை காவலர் ரேவதி அளித்த வாக்குமூலம் தான் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ளது. தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடய காவல் ஆய்வாரள் ஸ்ரீதார், எஸ்.ஐ. ரகு கணேஷ், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், காவலர் முத்துராஜ் உள்ளிட்ட 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி தந்தை, மகன் மரணம் தொடர்பாக வாக்குமூலம் அளித்த தலைமைக் காவலர் ரேவதியிடம் தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து அவரின் கணவர் சந்தோசம் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்து உள்ளார். அதில் அவர் கூறியது, என்னுடைய மனைவி ரேவதி வாக்குமூலம் அளித்த நாளிலிருந்து சாப்பிடவில்லை. கடும் மனஉளைச்சலில் உள்ளார். நாள்தோறும் நூற்றுக்கணக்கான செல்போன் அழைப்புகள் வருகிறது. பாதுகாப்பு கருதி அவர் அதை எடுக்கவில்லை. எனது மனைவிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து ரேவதிக்கு பாதுகாப்பு வழங்கவும், ஊதியத்துடன் விடுப்பு வழங்கவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

-விளம்பரம்-
Advertisement