பிக் பாஸில் ஜி பி முத்து – கேலி செய்து சதிஷ் போட்ட ட்வீட். சதீஷை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள் (தேவையா இது)

0
2328
sathish
- Advertisement -

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சமீபத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. இந்த சீசனில் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்து இருந்தனர். தமிழில் ஒளிபரப்பாவது போல ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் தமிழில் 5வது சீசன் விரைவில் ஆரம்பமாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்று வெளியானது. மேலும், கடந்த சில வாரங்களாகவே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போகும் பிரபலங்களின் பெயர்கள் அடிக்கடி சமூக வலைதளத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது.

இதையும் பாருங்க : இந்த மாதிரி ஒரு அரசியல ரொம்ப நாளா பாக்கல – ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷை புகழ்ந்த விஜய் சேதுபதி.

- Advertisement -

அந்த வகையில் இந்த சீசனில் டிக் டாக் புகழ் ஜி பி முத்து கலந்துகொள்ள இருப்பதாக நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது. இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் செட்டிற்கு முன் ஜி பி முத்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.இதனால் இந்த சீசனில் ஜி பி முத்து கலந்துகொள்வது உறுதியாகிவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டாம் என்று பலரும் கமன்ட் செய்து வருகின்றனர்.பிக் பாஸ் போன பெரும்பாலானோர் பெயர் டேமெஜ் ஆகி தான் வெளியில் வந்தார்கள் என்று என்பது தான் உண்மை. அதனாலேயே ஜி பி முத்துவை பிக் பாஸில் கலந்துகொள்ள வேண்டாம் என்று கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த புகைப்படம் வைரல் ஆனதில் இருந்தே ஜி பி முத்துவை பிக் பாஸுடன் ஒப்பிட்டு பல மீம்கள் வைரலானது. இப்படி ஒரு நிலையில் பிரபல காமெடி நடிகர் சதீஷ், உள்ள டாஸ்க் லெட்டர்ர மட்டும் படிக்க விட்றாதீங்க, என்னடா டாஸ்க் குடுத்திருக்கீங்க, செத்த பயலுவலா, நாரா பயலுவலா என்று கிண்டல் செய்து இருந்தார். ஆனால், சதீஷின் இந்த பதிவிற்கு பலரும், படத்துலயும் இப்படி காமெடி பண்ணுங்க என்று சதீஷை கலாய்த்து வருகின்றனர்.

Advertisement