நடிகை சத்யாபிரியா மகள் யார் தெரியுமா – புகைப்படம் உள்ளே

0
16210

நடிகை சத்யப்ரியா 1954ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இவர் தமிழ்,தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என 300க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதில் 50 படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் சத்யப்ரியா.

satya

1975ஆம் ஆண்டு மஞ்சள் நிற முகமே என்ற தமிழ் படத்தில் விஜய்குமாருக்கு ஜோடியாக அறிமுகம் ஆனார் சத்யப்ரியா. அதன்பின்னர் தீபம், சக்ராயுதம், மனிதரில் இத்தனை நிறங்களா, புதிய பாதை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்

ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் குறைந்த பின்னர் அம்மா கேரக்டரிலும், வில்லி கேரக்டரில் நடிக்க துவங்கினார் சத்யபிரியா. அஞ்சலி, எதிர் காற்று, அக்னி பார்வை, ரோஜா, மேட்டுப்பட்டி மிராசு, லேசா லேசா, மாயி, காதலுடன், பகவதி, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் சத்யப்ரியா.

satya

கோலங்கள், இதயம், வம்சம் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ள சத்யப்ரியா கடைசியாக 2014ல் தமிழில் வாய மூடி பேசவும் என்ற படத்தில் நடித்தார். தற்போது தமிழில் வணங்காமுடி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவரது மகளுக்கு கடந்த 2015ஆம்.ஆண்டு திருமணம் செய்து வைத்தார். இந்த திருமணத்திற்கு தமிழ் திரையுலகின் அனைத்து பிரபலங்களும் வந்து கலந்துகொண்டனர்.

satya