கட்சியில் சேர கூப்டடாங்க, ஒரு மதத்தை போற்றும் கட்சியுடன் சேர எனக்கு விருப்பமில்லை – சத்யராஜ் மகள்

0
140
Sathyaraj
- Advertisement -

கட்சியில் இணைவது குறித்து நடிகர் சத்யராஜின் மகள் கூறி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக அறிமுகமாகி பின்னர் முன்னணி கதாநாயகனாக தமிழ் சினிமாவை வலம் வந்தவர் சத்யராஜ். இவர் “கட்டப்பா” என்ற ஒற்றைச் சொல்லின் மூலம் சினிமா ரசிகர்களை தன்பக்கம் கட்டிப் போட்டவர். கடலோர கவிதைகள் என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகில் நடிகராக அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதனை அடுத்து இவர் பல படங்களில் ஹீரோவாக நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்து இருந்தார்.
மேலும், இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். தற்போது இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் வெளிவந்த சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் சத்யராஜ் நடித்து இருக்கிறார். மேலும், சத்யராஜுக்கு சிபிராஜ் என ஒரு மகனும் மற்றும் திவ்யா என்ற மகளும் உள்ளனர்.

- Advertisement -

சிபிராஜ் குடும்பம்:

சிபிராஜ் தன் தந்தையை போல் சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால், சத்யராஜ் மகள் திவ்யா அப்படி இல்லை. இவர் சின்ன வயதில் படங்களில் நடிக்க ஆசை பட்டாலும் பின்னர் வேறு துறைக்கு மாறிவிட்டார். தனது அப்பாவினை போலவே இவரும் ஒரு நாத்திகவாதி. இந்தியாவில் உள்ள டாப் நியூட்ரிசனிஸ்ட்களில் ஒருவர் சத்தியராஜ் மகள் திவ்யா. நியூட்ரிஷன் துறையில் எம்.பில் பட்டம் பெற்றுள்ளார். மேலும், இவர் நியூட்ரிஷன் சர்வதேச அளவில் நியூட்ரிஷன் துறையில் பல கான்பெரன்ஸ் நடத்தியுள்ளார்.

சத்யராஜ் மகள் குறித்த தகவல்:

அடிக்கடி ஊட்டச்சத்து குறித்த பல பயனுள்ள பதிவுகளை திவ்யாவும் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் சத்யராஜின் மகள் திவ்யா அரசியலில் ஆர்வம் உண்டு என்று பேட்டி அளித்திருந்தார். இதனை அடுத்து சில அரசியல்வாதிகள், தங்களுடைய கட்சிகளில் சேர சொல்லி கூறி வருகின்றார்கள். இதனால் இந்நிலையில் இது தொடர்பாக சத்யராஜின் மகள் திவ்யா செய்தி ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், வணக்கம்! எனக்கு அரசியலில் ஆர்வம் இருக்கிறது என்று என்னுடைய சில பத்திரிகை நண்பர்களிடம் சொன்னது உண்மைதான்.

-விளம்பரம்-

சத்யராஜ் மகள் வெளியிட்ட செய்தி:

அதற்குப் பிறகு எல்லோருமே என்னிடம், நீங்கள் எம்பி ஆகத்தான் அரசியலுக்கு வருகிறீர்களா? ராஜ சபா எம்பி பதவி மேல் உங்களுக்கு ஆசை இருக்கிறதா? உங்களுக்காக சத்யராஜ் பிரச்சாரம் செய்வாரா? போன்ற பல கேள்விகளை கேட்கிறார்கள். உண்மையில் நான் பதவிக்காகவோ, தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றோ அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைக்கவில்லை. மக்களுக்கு சேவை செய்வதற்காக தான் நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைக்கிறேன்.

அரசியல் குறித்து சொன்னது:

நான் சமூக சேவை செய்ய ஆரம்பித்து சில வருடங்கள் ஆகிறது. மூன்று வருடங்களுக்கு முன்பே மகிழ்மதி இயக்கம் என்ற அமைப்பை தொடங்கி விட்டேன். அந்த அமைப்பின் மூலம் தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்கி வருகிறோம். இதனால் நான் தனி கட்சி எல்லாம் ஆரம்பிக்க போவதில்லை. அதேபோல் வருகிற தேர்தலில் போட்டியிட எனக்கு ஒரு கட்சியில் இருந்து அழைப்பு வந்தது உண்மைதான். ஆனால், எந்த ஒரு மதத்தை போற்றும் கட்சியுடன் சேர எனக்கு விருப்பமில்லை. அதோடு நான் எந்த கட்சியில் சேரப் போகிறேன் என்பதை தேர்தல் முடிந்தவுடன் சொல்கிறேன். சத்யராஜ் மகளாகவும், ஒரு தமிழ் மகளாகவும், தமிழகத்தின் நலன் காக்க உழைப்பேன் என்று கூறியிருந்தார்.

Advertisement