பார்வையற்ற கமல் எப்படி அந்த வரியை பாட முடியும்? விமர்சனங்களுக்கு வைரமுத்து கொடுத்த விளக்கம்.

0
402
- Advertisement -

சர்ச்சையில் சிக்கிய கமல் பாடலுக்கு வைரமுத்து முற்றுப்புள்ளி வைத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. கடந்த 1981 ஆம் ஆண்டு இயக்குநர் சங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான படம் தான் ராஜபார்வை. இது கமலஹாசனின் நூறாவது திரைப்படம். இந்த படத்தை கமல் தயாரித்ததோடு இல்லாமல் படத்தின் கதையும் எழுதியிருந்தார். படத்தில் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்த ரகு சிறுவயதிலேயே தன்னுடைய அம்மாவை இழந்து விடுகிறார்.

-விளம்பரம்-

ரகுவின் மீது அப்பா பாசத்தை காட்டினாலும் சித்தியின் கொடுமையால் ரகு பல கஷ்டங்களை அனுபவித்தார். அவருக்கு ஒரே ஆறுதல் அவருடைய பாட்டி மட்டும்தான். ஒரு கட்டத்தில் பாட்டியும், அப்பாவும் இறந்து விட பாசத்திற்காக ரகு ஏங்குகிறார். பின் ரகுவிற்கு ஏற்பட்ட உடல்நல குறைவால் அவருக்கு கண் பார்வை போய்விடுகிறது. இதனால் அவருடைய சித்தி ரகுவை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார். பார்வையற்ற பள்ளியில் சேர்ந்த ரகு இசையில் ஆர்வம் காட்டி வரும் நாட்களில் மிகப்பெரிய வயலின் கலைஞராக வருகிறார்.

- Advertisement -

ராஜபார்வை படம்:

இப்போது நாயகி நான்சிக்கும் ரகுவிற்கும் இடையே நல்ல பழக்கம் ஏற்படுகிறது. இவர்களுடைய பழக்கமும் காதலாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் இவர்களின் காதல் விவகாரம் நான்சி வீட்டிற்கு தெரிய வர மதப் பிரச்சனையின் காரணமாக இவர்கள் இருவரையும் பிரிக்க முயல்கிறார்கள். இறுதியில் இவர்கள் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படத்தில் கண் தெரியாத பார்வையற்ற ரகு கதாபாத்திரத்தில் கமல் நடித்திருந்தார். கிறிஸ்துவ பெண்ணாக நான்சி கதாபாத்திரத்தில் மாதவி நடித்திருந்தார். இருவருக்கும் இடையே நடக்கும் காதல் கதை தான் படம்.

படம் குறித்த தகவல்:

இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், இந்த படத்தின் 100 வது நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் எம்ஜிஆர் கமலுக்கு பரிசு அளித்து இருந்தார். விமர்சனரீதியாக ராஜபார்வை இன்று கொண்டாடப்பட்டாலும், 100 நாள்கள் ஓடிய போதிலும் அன்று அதுவொரு தோல்விப் படமாகவே கருதப்பட்டது. மேலும், இந்த படத்தில் இளையராஜாவின் பாடல்களும் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. அதிலும் அந்தி மழை பொழிகிறது என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் ஒலிக்கப்பட்டு தான் இருக்கிறது. இந்த பாடல்கள் எல்லாம் வைரமுத்து தான் எழுதியிருந்தார்.

-விளம்பரம்-

கமல் பாடல் குறித்த சர்ச்சை:

இந்த நிலையில் ராஜபார்வை படத்தின் பாடல்கள் குறித்த சர்ச்சை தான் சில மாதங்களாகவே சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது, பார்வையற்ற பார்வையற்ற இளைஞனாக இருக்கும் கமல் தன்னுடைய காதலியை நினைத்து அந்திமழை பொழிகிறது உன் முகம் தெரிகிறது என்று பாடல் பாடுகிறார். அதில் அவர்,+ எப்படி உன் முகம் தெரிகிறது என்று பாட முடியும். காட்சிக்கும் படலுக்கும் சம்பந்தமே இல்லையே என்றெல்லாம் கேள்வி கேட்டிருக்கிறார்கள். இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் வைரமுத்து, படத்தில் கமல் ஒரு வயலின் கலைஞர்.

vairamuthu-issue

வைரமுத்து கொடுத்த விளக்கம்:

அவர் ஒருநாள் ஸ்டுடியோவில் ஒரு பாடலுக்காக பாடும் போது தான் எஸ்.பி பாலசுப்பிரமணியம் குரலில் இந்த பாடல் எழுதப்பட்டது. அது கமலுக்காக எழுதியது கிடையாது. அதேபோல் அந்தி மழை என்பதற்கு பதிலாக திராட்சை ரசம் பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது என்ற வரிகள் தான் எழுதப்பட்டது. அது சரியாக வராது என்பதனால் தான் அந்திமழை என்ற வார்த்தை போடப்பட்டது என்று கூறியிருக்கிறார்.

Advertisement