நகைச்சுவை நடிகர் கவுண்டமணி மீடியாக்களில் பேட்டி கொடுக்காததற்கு காரணம் இதுதானாம் – சத்யராஜ் சொன்ன விஷயம்

0
241
- Advertisement -

கவுண்டமணி பேட்டி கொடுக்காததற்கான காரணம் இதுதான் என்று நடிகர் சத்யராஜ் கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடியில் ஜாம்பவனாகவும், சக்கரவர்த்தியாகவும் திகழ்ந்தவர் கவுண்டமணி. அன்றும் இன்றும் என்றும் இவருடைய காமெடிக்கு எவரும் நிகரில்லை என்று சொல்லலாம். காமெடி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் முதலில் ஞாபகத்தில் வருவது கவுண்டமணி பெயர் தான்.

-விளம்பரம்-

அந்தளவிற்கு தன்னுடைய நகைச்சுவை திறமையின் மூலம் மக்களை தன்வசம்படுத்தி இருக்கிறார். மேலும், இவருடைய கவுண்டர்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இவர் கதாநாயகர்களுக்கு இணையாக ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்தவர். இவர் ரஜினி, கமல் காலகட்டம் தொடங்கி தற்போது உள்ள நிறைய நடிகர்கள் வரை என பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார். இவர் முதலில் தனியாக தான் படங்களில் கலக்கி வந்தார்.

- Advertisement -

கவுண்டமணி– செந்தில் காம்போ:

பின் செந்திலுடன் இணைந்து பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்தார். அதிலும் கவுண்டமணி– செந்தில் காம்போ எல்லாம் வேற லெவல். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காமெடி படங்கள் எல்லாம் இன்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. காலங்கள் மாற மாற இவர்களுடைய பயணமும் மாறிவிட்டது.

மீண்டும் சினிமாவில் கவுண்டமணி :

இருந்தாலும் இப்போது வரை தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி –செந்தில் காம்போவை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இவர் 2016ஆம் ஆண்டில் வெளியான “வாய்மை” என்ற படத்திற்கு பிறகு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. கவுண்டமணி தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக சினிமாவில் களமிறங்கி விட்டார். ‘ஒத்த ஓட்டு முத்தையா’ என்ற முழு நேர நகைச்சுவை திரைப்படத்தில் தான் கதாநாயகனாக கவுண்டமணி நடிக்கிறார்.

-விளம்பரம்-

சத்யராஜ் பேட்டி:

இந்த படத்தை சிசி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம்புலி, வையாபுரி, முத்துக்காளை, எதிர்நீச்சல் ஜான்சி ராணி, தாரணி, கூல் சுரேஷ், மறைந்த நடிகர் நாகேஷின் பேரன், மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, கவுண்டமணி தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே அவர் எந்த மீடியாவுக்கும் பேட்டி கொடுத்தது இல்லை. அப்படியே கொடுத்தாலும் ரொம்ப குறைவுதான்.

கவுண்டமணி பேட்டி கொடுக்காத காரணம்:

இதுகுறித்து பலருமே கேள்வி கேட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் சத்யராஜ், கவுண்டமணியிடம் ஏன் பேட்டி கொடுக்கவில்லை என்று கேட்டால், ‘என்னுடைய பேட்டி நாட்டுக்கு தேவையே இல்லாதது. நீ கொடுக்கிற காசுக்கு நான் திரையில் உங்களை சிரிக்க வைக்கிறேன். அதை மட்டும் பாரு, சிரிச்சா சிரி, இல்லனா போ. அதைத் தாண்டி நீ என்னை பற்றி தெரிஞ்சுக்க ஒன்னும் இல்லை’ என்று சொல்லுவார். அவருக்கு இந்த பேட்டி கொடுப்பதில் அதிக ஆர்வமும் கிடையாது என்று கூறியிருக்கிறார்.

Advertisement