‘மாட்டு சாணி மாதவனுக்கு செருப்படி பதில்’ – மயில்சாமி அண்ணாதுரை வீடியோவை பகிர்ந்து மாதவனை திட்டிய நபர். அதற்கு அவரின் கூலான பதிலடி.

0
442
madhavan
- Advertisement -

மாதவன் கருத்துக்கு இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கொடுத்து இருக்கும் விளக்கம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் மாதவன். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் எழுத்தாளர், படத்தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான ‘அலைபாயுதே’ என்ற படம் மூலம் தான் மாதவன் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

இவரின் முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருந்தார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இடையில் கொஞ்சம் மாதவன் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டாலும் தற்போது படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் சமீப காலமாக மாதவன் நடித்த விக்ரம் வேதா, இறுதி சுற்று போன்ற பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

- Advertisement -

ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்:

தற்போது மாதவனே இயக்கி, நடித்திருக்கும் படம் ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’. இது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்திருக்கும் படம். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதோடு இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என ஐந்து மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடித்து இருக்கிறார். அவரது மனைவியாக சிம்ரன் நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் கௌரவ வேடத்தில் இந்திப் பதிப்பில் ஷாருக்கானும், தமிழ் பதிப்பில் சூர்யாவும் நடித்திருக்கிறார்கள்.

பஞ்சாங்கம் குறித்து மாதவன் சொன்னது:

பெரும் பொருட் செலவில் இந்த படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் ஜூலை 1-ஆம் தேதி திரைக்கு வரப்போகிறது. தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் மும்முரமாக நடந்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக மாதவன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்திருக்கிறார். அதில் அவர், அமெரிக்கா, ரஷியா, சீனா, ஐரோப்பிய நாடுகள் பல கோடிக்கணக்கில் செலவழித்து 32, 33 வது முறையில் தான் செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோளை அனுப்பி வெற்றி பெற்றது. ஆனால், இந்தியா சிறிய எஞ்சினை வைத்துக்கொண்டு பஞ்சாங்கத்தின் உதவியுடன் 2014 ஆம் ஆண்டு செவ்வாய்கிரகத்துக்கு செயற்கைக்கோள் அனுப்பி இருந்தது என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை விளக்கம் :

இப்படி இவர் பேசியிருந்தது சோசியல் மீடியாவில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்தது. இந்த நிலையில் இது குறித்து இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் அவர், விண்வெளி பயணங்களுக்கு பஞ்சாங்கத்தை உலகளவில் பயன்படுத்தினார்கள். ஒரு காலத்தில் இங்கிருந்து பார்ப்பதற்காக ஆர்பட்டாவிலிருந்து அதை செய்தார்கள். ஆனால், பஞ்சாங்கம் என்பது ஆண்டாண்டு காலமாக இருக்கக்கூடிய ஒன்று கிடையாது. இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கணிக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கணிக்கப்பட்ட பஞ்சாங்கத்தை வைத்துக்கொண்டு செவ்வாய் கிரகம் செல்வது என்பது முடியாத காரியம். அது முதலில் சரியாக இருக்க வேண்டும்.

பஞ்சாங்கம் குறித்து சொன்னது:

ஏனென்றால், அந்தந்த நேரத்தில் இருக்கக்கூடிய கிரகங்களின் இடங்களை கணித்து வைத்துக்கொண்டு அதற்கு ஏற்ப உலகளாவில் பஞ்சாங்கம் மாறுதல் அடைகிறது. அந்த மாறுதலுக்கு ஏற்ப தான் புதிதாக உருவாக்கப்பட்ட ‘அர்பனாக்’ என்ற பஞ்சாங்கத்தை வைத்து தான் எந்த நேரத்திலிருந்து ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பயணத்தை தொடங்க வேண்டும். எவ்வளவு வேகத்தில் எப்படி சென்றால் இலக்கை அடைவோம் என்பதை தற்போது அறிவியல்பூர்வமாக கோள்கள் இருக்கக்கூடிய இடங்கள், கோள்களின் பயணங்கள், நாம் பூமியில் இருக்கக்கூடிய இடம், நாம் அனுப்பக்கூடிய பி.எஸ்.எல்.வி. எப்படி போகும், சந்திரயான் எப்படி போகும்? என அனைத்தையும் கணித்து பல ஆய்வுக்கு பிறகு தான் நேரம் கணிக்கப்படுகிறது.

கேலி செய்தவருக்கு மாதவன் பதில் :

பஞ்சாங்கத்தை பார்த்து நேரம் குறிக்கப்படுவது கிடையாது. பஞ்சாங்கம் என்பது கோள்கள் எங்கு இருக்கிறது என்பதை சொல்கிறது. கோள்களின் நகர்வுகளை பார்த்தே நேரம் குறிக்கப்படுகிறது என்று கூறி இருந்தார். இந்த வீடியோ ட்விட்டரில் நெட்டிசன் ஒருவர் பகிர்ந்து இருந்தார். அதில் ‘மாட்டு சாணி மாதவனுக்கு செருப்படி பதில்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள மாதவன் நன்றி மற்றும் ராக்கெட்டை குறிப்பிடும் எமோஜிகளை போட்டு இருக்கிறார்.

Advertisement