GOAT படத்தின் ‘விசில் போடு’ பாடலில் இடம்பெற்ற ‘கேம்பைனைதொரக்கட்டுமா? மைக்கை கையில் எடுக்கட்டுமா? என்ற வரிகள் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாவு தெரிவிப்பது போல இருப்பதாக கருத்துக்கள் கிளம்பிய நிலையில் தற்போது இதுகுறித்து விளக்கமளித்துள்ளார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான். லியோ படத்தை தொடர்ந்து தற்போது விஜய் GOAT படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் முதல் பாடலான ‘விசில் போடு’ பாடம் வெளியாகி இருந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடலுக்கு மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதி இருக்கிறார்.
மேலும், ராஜு சுந்தரம் இந்த பாடலுக்கு நடனமைத்து இருக்கிறார். விஜய் பாடியுள்ள இப்பாடல் யூட்யூபில் தற்போது வரை 30 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங்கில் நமபர் 1 இடத்தில் இருக்கிறது. ஆனாலும், இந்த பாடல் ஒரு தரப்பு ரசிகர்ளை அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த பாடலுக்கு யுவனுக்கு பதிலாக அனிருத் இசையமைத்து இருக்கலாம் என்று ஒரு தரப்பு கூறி வரும் நிலையில் இன்னொரு புறம் இந்த பாடலின் வரிகள் நன்றாக இல்லை என்றும் கூறி வருகின்றனர்.
இப்படி ஒரு நிலையில் இந்த பாடலின் ஆரம்பத்தில் ‘கேம்பைனை தான் தொடங்கட்டுமா,மைக்க கையில் எடுக்கட்டுமா’ என வரும் வரிகள் விஜய்யின் அரசியல் வருகையை குறிப்பது போலவே இருந்தது. இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய், வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க மறைமுகமாக சொல்கிறார் என்று சமூக வலைதளத்தில் ஒரு புரளி கிளம்பியது. ஏனென்றால் இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் தான் போட்டயிடுகிறது.
அதற்கேற்றார் போல சமீபத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த துரைமுருகன் அளித்த பேட்டி ஒன்றில் ‘கோட் பாடல் மூலம் மறைமுகமான ஆதரவை நாம் தமிழர் கட்சிக்கு விஜய் கொடுத்திருப்பதை பார்க்க முடிகிறது. நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் பாடல் வெளியாகியிருக்கும் நிலையில் அதில் கேம்பைனை தொடங்கட்டுமா? மைக்க பிடி போன்ற வரிகள் இடம் பெற்றுள்ளன.
மைக் சின்னத்தை அந்த பாடலில் வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனால் வைத்திருக்கிறார்.. இதன் மூலம் எங்களை மறைமுகமாக விஜய் ஆதரிக்கிறார்’ என்று சாட்டை துரை முருகன் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பத்திரையாளர்களை சந்தித்தார். விசில் போடு பாடலில் மைக் சின்னத்தை விஜய் ஆதரிக்கிறாரா என்று பத்திரிக்கையாளர் கேள்வி செழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த சீமான் ‘கேம்பைனை தொடங்கட்டுமா? மைக்க கையில் எடுக்கவா என்று என் தம்பி விஜய் பாடியது என்னுடைய தம்பிகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது எங்களை எதிர்த்து நிற்கும் அனைவருக்கும் நடுக்கமாக இருக்கிறது, என்ன இப்படி எல்லோரும் ஒரே மாதிரி கிளம்பி விட்டார்கள் என்று நினைக்கிறார்கள். பார்ப்போம், பொறுத்திருந்து பார்ப்போம்’ என்று கூறியுள்ளார்.