விஜய் அரசியலுக்கு வரனும், ஆனா, அப்படி வந்தா எனக்கு இதை செய்யனும் – சீமான் வைத்த செக். இதோ வீடியோ.

0
470
Seeman
- Advertisement -

தம்பி விஜய் தான் என்னை ஆதரிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இதனால் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

-விளம்பரம்-

இப்படி இருக்கும் நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட்டார்கள். தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மொத்தம் 169 பேர் போட்டியிட்டு அதில் 129 பேர் வெற்றி பெற்றார்கள். இப்படி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது. அதுமட்டுமில்லாமல் விஜய் அழைத்து அவர்களை பாராட்டியும் இருந்தார். அதன் பின் பல ஆண்டுகளுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசு அறிவித்து இருந்தது.

- Advertisement -

விஜய் மக்கள் இயக்கம்:

இதில் விஜய் மக்கள் இயக்க கட்சியும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டது. இதற்கு தளபதி விஜய் அவர்கள் தன்னுடைய புகைப்படம் மற்றும் மக்கள் இயக்கத்தின் கொடியை தேர்தலில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்திருக்கிறார். இப்படி விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும் தங்களின் ஜனநாயக கடமையை செய்து வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் விஜய் அவர்களை அடிக்கடி சந்தித்து இருந்த புகைப்படம் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. விஜயின் இந்த சந்திப்பு எல்லாம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

விஜய் செய்யும் செயல்பாடுகள்:

இதை தொடர்ந்து தொண்டர்கள் கூட்டம் மாதம் மாதம் நடைபெறும் என்று விஜய் இயக்கம் சார்பாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இப்படி விஜய் அவர்கள் திரைத்துறையை தாண்டி அரசியலிலும் தன்னுடைய செல்வாக்கை நிலைநாட்ட இருக்கிறார் என்று பலரும் கூறுகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் அன்று ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள சிலை மற்றும் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த விஜய் கூறியிருந்தார். அந்த வகையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சீமான் அளித்த பேட்டி:

இதனை அடுத்து தீரன் சின்னமலை பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய உருவ சிலைக்கும் மரியாதை செய்ய வேண்டும் என்று விஜய் உத்தரவிட்டதாக புஸ்ஸி ஆனந்த் கூறியிருக்கிறார். இப்படி சமீப காலமாக விஜயினுடைய செயல் எல்லாம் அரசியலுக்கு வரும் நோக்கில் இருப்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் விஜய்யின் இந்த செயல்களை குறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கூறியிருந்தது, அரசியலுக்கான முயற்சியை தான் என் தம்பி விஜய் செய்கிறார். அதை நான் வரவேற்கிறேன்.

விஜய் அரசியல் குறித்து சொன்னது:

மாற்றுக் கட்சி என்பது அரை நூற்றாண்டகளாக இந்த மண்ணில் நடந்து வருகிறது. விஜய் அரசியலுக்கு வரும்பொழுது இன்னும் வலிமையாக இருக்கும். ஒரு நபராக என்னால் எல்லோரையும் எதிர்த்து சண்டையிட முடியவில்லை. விஜய் வந்தால் இன்னும் ஆதரவாக இருக்கும். அதனால் அவர் வரனும். விஜய்யும் அரசியலுக்கு வர வேண்டும் என நினைக்கிறார். அதற்கான முயற்சிகள் தான் அவர் இப்போது முன்னெடுக்கின்ற செயல்பாடுகள். நான் யாரையும் ஆதரிப்பதில்லை. தம்பி விஜய் தான் என்னை ஆதரிக்க வேண்டும். எங்களுடைய இயக்கம் தனித்த ஒரு பேரியக்கம். எனக்கு ஒரு கனவு இருக்கிறது. எங்களுடைய மொழி சிதைந்து அழிந்து கொண்டிருக்கிறது. வளம், மழை, காடு அனைத்தும் பாதுகாக்க வேண்டும். சமமான தரமான கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

Advertisement