‘ஹே ராம்’ல் நான் ஏன் காந்தியைக் கொலை செய்ய நினைப்பவனாக நடித்தேன் ? – ராகுல் காந்தியிடம் கமல் விளக்கம்.

0
354
kamal
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களால் ஒருவராக உலகநாயகன் என்ற அந்தஸ்துடன் வலம் வருபவர் நடிகர் கமலஹாசன். இவர் தன்னுடை நடிப்பின் மூலம் பல விருதுகளையும் பல வெற்றித்திரப்படங்களையும் கொடுத்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகிய விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது. மேலும் இவர் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் அரசியலிலும் மக்கள் நீதி மையம் என்ற கட்சியையும் நடத்தி வரும் கமல் சமீபத்தில் காங்கிரசு கட்சித் தலைவரான ராகுல் காந்தியுடன் ஒரு நேர்காணலில் பேசியிருந்தார்.

-விளம்பரம்-

அவர் அந்த நேர்காணலில் ராகுல் காந்தியுடன் பேசுகையில் நாட்டின் அரசியல், தார்ச்சார்பு பொருளாதாரம், ராணுவம், நாட்டின் பாதுகாப்பு போன்ற பல விஷியங்களை பற்றி பேசியிருந்தனர். அதோடு “ஹே ராம்” படத்தில் கமலஹாசன் காந்தியை கொள்ள துடுக்கும் நபராக ஏன்? நடித்திருந்தார் என்பதை பற்றி கூறியிருந்தார். அவர் கூறுகையில் `என்னுடைய அப்பா ஒரு காங்கிரசு கட்சியை சேர்ந்தவர்.ஆனால் நான் காந்தியை பற்றி என்னுடைய சிறிய வயதில் கடுமையாக விமரிசித்திருக்கிறேன்.

- Advertisement -

ஆனாலும் என்னுடைய அப்பா ஒரு வழக்கறினராக இருந்தும் கூட என்னுடன் விவாதம் செய்ய மாட்டார். நான் அப்படி சொல்லும்போதெல்லாம் வரலாற்றை படி என்று மட்டுமே கூறுவார். பின்னர் என்னுடைய 24, 25 வயதுகளில் தான் கத்தியை பற்றி நன்றாக புரிந்து கொண்டேன், மேலும் அவரை பற்றி இதனை நாள் புரிதலால் நான் அவருடைய ரசிகனாக மாறிவிட்டேன். அதனால் தான் “ஹே ராம்” திரைப்படத்தில் காந்தியை கொல்ல திட்டம் போடும் நபராக நடித்திருப்பேன்.

மேலும் அந்த படத்தில் நடித்திருந்த கதாபாத்திரம் காந்தியின் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக அவரை நெருங்கி நெருங்கி செல்லும். ஆனால் எவ்வளவு நெருங்கி சென்றதோ அந்த அளவிற்கு உண்மை தெரிய வருவதினால் அந்த கதாபாத்திரம் முற்றிலுமாக மாறிவிடும். இருப்பினும் அது மிகவும் தாமதமான மாற்றம் என்பதினால் மற்றொருவன் தான் செய்ய வந்த வேலையை செய்து விடுவான்.இருந்தாலும் அந்த நிகழ்வின் மூலம் எப்படி அந்த கதாபாத்திரம் திருந்தியது என்று “ஹே ராம்” படத்தில் குறியிருப்பேன் என்று கூறினார் கமல்.

-விளம்பரம்-

கமல் கூறியதை கேட்டுக்கொண்டிருந்த ராகுல் காந்தியும் “காந்தியை புரிந்து கொள்ள நீங்கள் கையாண்ட விதம் அற்புதமானது என்று அவரை பாராட்டியிருந்தார். மேலும் இதற்கு பிறகு பல விஷியங்களை பற்றி இருவரும் பேசியிருந்தனர். கமல்ஹசன் இதற்கு முன்னர் கூட சமீபத்தில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பேசும்போது “நான் காந்தியின் பேரன்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement