கோவில் விழாவில் ‘ஊ சொல்றியா மாமா’ – ரசிகர்கள் செய்த ரகளையால் கோபப்பட்ட ஆண்ட்ரியா. ரசிகர்களை விரட்டியடித்த போலீசார்.

0
563
Andrea
- Advertisement -

தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து நடிகையாக மாறியவர் ஒரு சிலர் மட்டுமே அந்த லிஸ்டில் தற்போது கலக்கிக் கொண்டு இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. ஆரம்பத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் அதன் பின்னர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்த ஆண்ட்ரியா ஒரு சில படங்களில் வில்லியாக நடித்து தனது நடிப்பை நிரூபித்து இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், நடிகை ஆண்ட்ரியாவிற்க்கு சர்ச்சை ஒன்றும் புதிதான விஷயம் கிடையாது. இவர் சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.ஆரம்பத்தில் பல்வேறு படங்களில் நடித்து வந்த ஆண்ட்ரியா அதன் பின்னர் குறிப்பிட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் அதிலும் வட சென்னை போன்ற படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

இதையும் பாருங்க : இது தான் தமிழ் வளர்ச்சியா ? ஏ ஆரின் ‘தமிழணங்கு’ பதிவிற்கு அவரின் தமிழ் பாடல்கள் மூலமே பதிலடி கொடுத்த காயத்ரி ரகுராம்.

- Advertisement -

பன் முகம் கொண்ட ஆண்ட்ரியா :

மேலும், வடசென்னை படத்தில் இவர் அமீருடன் நடித்த சேமி நியூட் காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது வடசென்னை படத்திற்கு பின்னர் தமக்கு தொடர்ந்து அதே போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் அதனை நிராகரித்து விட்டதாகவும் சமீபத்தில் கூறியிருந்தார் ஆண்ட்ரியா. நடிகையாக மட்டுமல்லாமல் ஆண்ட்ரியா பாடிய பல பாடல்கள் படு ஹிட் அடைந்து இருக்கிறது.

சமீபத்தில் ஹிட் அடித்த ஊ சொல்றியா மாமா :

அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் இவர் பாடிய ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் வேற லெவலில் ஹிட் அடித்தது. சொல்லப்போனால் தெலுங்கு பாடலை விட தமிழில் ஆண்ட்ரியா குரலில் பாடிய இந்த பாடல் தான் மாபெரும் ஹிட் அடித்தது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் கோவில் விழாவில் பங்கேற்ற ஆண்ட்ரியா இந்த பாடலால் தர்ம சங்கடத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.

-விளம்பரம்-

டான்ஸ் ஆட சொன்ன ரசிகர்கள் :

சேலம் மல்லூர் வேங்காம்பட்டி கோயில் திருவிழாவின் கடைசி நாளில் திரை இசை கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நேற்று கடைசி நாள் என்பதால் சில சினிமா பிரபலங்கள் கூட இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வரவேற்கப்பட்டனர். இதில் ஆண்ட்ரியாவும் கலந்துகொண்டார். மேலும், இசைக் கச்சேரியில் ‘ஊ சொல்றியா’ பாடலை பாடி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். அதன் பின்னர் ரசிகர்கள் சிலர் அவரை டான்ஸ் ஆட சொல்லி ஆராவாரம் செய்தனர்.

கடுப்பான ஆண்ட்ரியா :

ஆனால், டான்ஸ் ஆட மறுத்த ஆண்ட்ரியா ரசிகர்களின் செயலால் கடுப்பானார். மேலும், மேடையில் இருந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் என்னால் டான்ஸ் எல்லாம் ஆட முடியாது என்று கூறினார் ஆண்ட்ரியா. மேடைக்கு அருகில் ஆண்ட்ரியாவை காண ரசிகர்கள் முந்திக்கண்டு மேலே ஏற முற்பட்டதால் காவல்துறையினர் அனைவரையும் விரட்டியடித்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement