காவேரி பிரச்சனை – நடிகர் சங்கம் இதனால் தான் போராட்டம் பண்ண மாற்றங்க – சீமான்

0
773
- Advertisement -

இந்திய பாகிஸ்தான் பிரச்சினை போல தற்போது தமிழகமும் கர்நாடகமும் இருந்து வருகிறது. காவிரி நதிநீர் தமிழகத்திற்கு அளிப்பதற்கு கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது அது மட்டுமல்லாமல் இங்கிருந்து கர்நாடகா பெங்களூர் செல்லும் தமிழக வாகனங்களையும் ஓட்டுனர்களையும் தாக்கி வருகிறது. இமேலும் தமிழகத்திற்கு எதிராக அங்கு ஒரு போராட்டத்தையும் கன்னட அமைப்புகள் நடத்தி வருகிறது.

-விளம்பரம்-

சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் சித்தா படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாதியில் வந்த கன்னட அமைப்புகள் தமிழ் நடிகர் எப்படி சந்திக்கலாம் என்றும் அவரை மிரட்டி வெளியே அனுப்பினார். அதற்கு கர்நாடகத்தின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் சிவராஜ் குமார் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் மன்னிப்பு கூறினார். கர்நாடகாவில் சித்தார்த் வெளியேற்றியது பற்றி இங்கு உள்ள தமிழகத்தில் உள்ள நடிகர் சங்கமம் அல்லது தயாரிப்பாளர்கள் சங்கமும் கண்டனம் அறிக்கை கூட வெளியிடவில்லை.

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் சந்திரமுகி இரண்டாம் பாகத்திற்கு ஒரு அறிக்கையை விட்டார் கூட ஆனாலும் இது இந்த சித்தா படத்தின் தொடர்பாக அவர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. காவிரி நதிநீர் விவகாரத்தில் ரஜினிகாந்த் தமிழகத்திற்கு ஆதரவாக பேசக்கூடாது என்றும் கர்நாடகவிற்கு தான் ஆதரவாக பேச வேண்டும் என்றும் அன்புள்ள கனடா அமைப்புகள் ரஜினிகாந்துக்கு மிரட்டல்களை அளித்து வருகிறது. சினிமாவில் மட்டுமே விவசாயம் காப்போம் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசி வரும் நடிகர்களை குறித்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை.

இவர்களுடைய வீரம் எல்லாம் அனைத்தும் சினிமாவில் மட்டுமே என்றும் பலர் இவர்களை விமர்சித்து வருகின்றனர். அவ்வாறு கர்நாடகாவிற்கு எதிராக குரல் கொடுத்தால் அவர்கள் திரைப்படத்தை அங்கு கர்நாடகாவில் வெளியிட முடியாது என்று இங்கு உள்ள தமிழக நடிகர்கள் மௌனம் காத்து அறிகின்றனர். சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் கர்நாடகாவில் மட்டுமே 75 கோடி வசூலித்து வந்தது எனது மற்ற நடிகர்களின் படம் கர்நாடகாவிற்கு எதிராக யாரும் அறிக்கையையும் வாயையும் திறக்கவில்லை.

-விளம்பரம்-

சீமான் கருத்து:

கர்நாடகாவில் உள்ள நடிகர்கள் நடிகர்கள் இருந்தாலும் அவர்கள் உண்மையான கன்னடர்களாக இருக்கிறார்கள். ஆனால் இங்குள்ள தமிழ் நடிகர்களும் கர்நாடகா நடிகர்களாக மாறிவிட்டனர். என்னுடைய தம்பி விஜய் வைத்துக் கொள்ளலாம் அவர் இங்கு புகழ்பெற்ற நடிகர் ஆனால் அவர் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படம் கர்நாடகாவில் வழியாக விட்டார்களா? தற்போது லியோ திரைப்படத்தில் இருந்து வெளியாக விட மாட்டார்கள் ஆகையால் தான் தம்பி விஜய் அமைதி காத்து வருகிறார். அது அவருடைய திரைப்படம் என்றாலும் அதற்கு தயாரிப்பாளர் வேறு ஒருவர்தான் அவருக்கு நஷ்டமாக கூடாது என்பதற்காக விஜய் அமைதியாக இருந்து வருகிறார்.

ஆனால் இவர்கள் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை இங்கு தடுப்பதற்கு என்ன காரணம். திமுக வின் கூட்டத்திற்கு இவ்வளவு கூட்டம் தான் வரவேண்டும் என்று யாராவது கூறுகிறார்களா அல்லது உதயநிதி முதல்வர் மாநாட்டிற்கு இவ்வளவு கூட்டம் வரவேண்டும் என்று ஏதாவது கூறுகிறார்களா. அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடிகிறது ஆனால் இசைவெளியீட்டு விழாவுக்கு பாதுகாப்பு அளிக்க முடியவில்லை. கடந்த முறையை நடந்த இசைவெளியீட்டு விழாவுக்கு பாதுகாப்பு கொடுத்த உங்களுக்கு இப்போது கொடுக்க முடியாதா? அவர் தற்போது அரசியலுக்கு வருவார் என்று தான் அவருக்கு நெருக்கடி அளிக்கிறீர்கள்.

அவரை ஏதாவது அங்கு அரசியல் பேசுவார் என்று. ஆயிரம் திரையரங்குகள் உள்ளது ஆனால் நீங்கள் இசைவெளியீட்டு விழாவை தடை செய்யும் போது திரைப்படத்தை எப்படி வெளியிடுவது. அவர் அரசியலுக்கு வந்த பின் அரசியல் பற்றி பேசினால் என்ன செய்வீர்கள். இன்னும் சில நாட்கள் தான் சினிமாவில் இருப்பார். இப்போது திமுக எதிர்க்கட்சியில் இருக்கும் போது நடிகர் சங்கம் காவிரி பிரச்சனைக்கு போராடியது ஆனால் இப்போது திமுக ஆளுங்கட்சியாக இருக்கும் போது அவர்கள் ஏதும் போராட்டம் செய்யவில்லை.

Advertisement