குழந்தைகள் ஏன் மன அழுத்தத்திற்கு செல்கிறார்கள் என்று புரியுதா – தனது மகளுக்கு யுகேந்திரன் அளித்த அட்வைசால் கடுப்பான வனிதா

0
1937
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜோவிகாவிற்கு சீனியஸ் நடிகர்கள் கொடுத்த அட்வைஸை கேட்டு கடுப்பாகி வனிதா பதிவிட்டு பதிவு தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்து அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி அறிமுகமானது. முதல் சீசனை தொடர்ந்து தற்போது ஆறு சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஆறு சீசன்களையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

அதோடு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக நேற்று தொடங்கியது. மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி :

மேலும், இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. தற்போது 16 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று இருக்கிறார்கள். நேற்று வழக்கம் போல் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து இருக்கிறார்கள். இன்று நிகழ்ச்சியின் முதல் நாள் தொடங்கி இருக்கிறது முதல் நாள் காலையிலேயே பிக் பாஸ் வீட்டுக்குள் கன்டன்ட்டை தொடங்கி விட்டார்கள். எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

முதல் நிகழ்ச்சி:

அப்போது எல்லோருமே இந்த நிகழ்ச்சிக்கு வந்தது குறித்தும் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை குறித்தும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதில் ஜோதிகா, எனக்கு படிப்பு வராது. படிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லை. இதனால் நான் மன அழுத்தத்தில் இருந்தபோது என்னுடைய அம்மா வனிதா தான் நீ என்ன ஆகவேண்டும் என்று ஆசைப்படுகிறாய் என்று கேட்டார். நான் உடனே நடிகையாக வேண்டும் என்று சொன்னேன். பிறகு என் படிப்பை விட்டு நடிகையாக தேவையான கோர்ஸை எடுத்து படிக்க வைத்தார் என்று பேசிக் கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

சீனியர்ஸ் நடிகர்கள் கொடுத்த அட்வைஸ்:

இதைக் கேட்டவுடன் பலருமே ஜோவிகாவிற்கு அறிவுரை கூற ஆரம்பித்து விட்டார்கள். குறிப்பாக யுகேந்திரன் வாசுதேவன், நீ பேசிக்ஸ் பன்னிரண்டாம் வகுப்பு வரை கண்டிப்பாக படித்து விட வேண்டும். அது ரொம்ப முக்கியம் என்று கூறினார். உடனே விசித்திரா, இல்லை நீ ஒரு டிகிரி ஆவது முடிக்க வேண்டும் என்று சொன்னார். இப்படி மாறி மாறி பலரும் ஜோவிகாவிற்கு அறிவுரையும், சிலர் ஆதரவாகவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் ஜோவிகா கண்டுகொள்ளாதது போல் தான் இருந்தார்.

வனிதா விஜயகுமார் பதிவு:

இந்த நிலையில் இது தொடர்பாக வனிதா விஜயகுமார் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், குழந்தைகள் ஏன் மன அழுத்தத்திற்கு சென்று தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று நாம் ஆச்சரியப்படுகிறோம். அவர்களுக்கும் கல்வி அழுத்தம், உடன் இருப்பவர்களின் அழுத்தம், சமூக அழுத்தம் என்று அனைத்தும் இருக்கிறது. எல்லா குழந்தைகளும் ஒன்று கிடையாது. ஒரு சிலர் அதை உடைத்து எரிவார்கள். ஹோவிகா அளித்த பதில்- இதை விட்டுவிட்டு வேறு ஏதாவது பேசலாம் என்பது தான். அது தான் முதிர்ச்சி என்று கூறி இருக்கிறார்.

Advertisement