“சனாதனம் பேச்சு என்பது இதையெல்லாம் திசை திருப்பும் முயற்சி தான்.” பிரதமரையும் தமிழக முதல்வரையும் விமர்சித்த சீமான்.  

0
617
- Advertisement -

பத்தாண்டு காலம் ஆட்சி செய்து விட்டார்கள் மக்களிடம் நன்மையாக சொல்வதற்கு அவர்களிடம் எதுவுமே கிடையாது. ஆகவே மக்களை திசை திருப்பும் முயற்சியில் தான் பாரதம் பெயர் மாற்றம் மற்றும் சனாதனம் பிடித்து பேசி வருகின்றனர். நம்முடைய பாட்டன் பாரதி கூட பாரத தேசம் தோள் தோள் தட்டுவோம் என்று கூறியிருந்தார். அதன் பெயர் மாற்றத்தை ஏன் இந்த 10 ஆண்டுகளில் அவர்கள் அதை மாற்றி இருக்கலாம் தேர்தல் இன்னும் வர நான்கு மாதம் இருக்கும் நிலையில் எவ்வாறு மாற்றுவது ஏன்.? சனாதன கோட்பாட்டிற்கும் மதத்தை குறை சொல்வதாக கூறுவதும் மிகவும் வேறுபாடு இருக்கிறது.

-விளம்பரம்-

சீமானின் பேச்சு:

அதை தேவையில்லாமல் பேசிக்கொண்டு சர்ச்சையாகவே கொடுத்து தூக்கி பிடித்து கொண்டிருக்கிறார்கள். சனாதனத்தில் பிறப்பின்  உயர்வு தாழ்வு இருக்கிறது என்று பேசுபவன் பதவி விலக மாட்டாராம் அது இல்லை என்று பேசுபவர் பதவி விலக வேண்டுமா. என்னை தாழ்ந்தவன் என்று கூற யார் நீ. இறைவன் முன்னிலையில் அனைவரும் சமம் தான் யாரும் தாழ்ந்தவர் உயர்ந்தவர் கிடையாது. உன் சக மனிதரை தாழ்த்தி வீழ்த்து சுகம் காட்டுவது  மனநிலை நோய் இல்லாமல் வேற என்ன என்று கூறுவது. அடுத்த தற்போது ஒன்பதரை மாதங்கள் நிறைவு ஓடியது தற்போது பாரத் பெயர் மாற்றம் அதை செய்து விட்டால்  180 லட்சம் கோடி கடன்கள் உள்ளது அதை தள்ளுபடி ஆகி விடுமா.

- Advertisement -

பசி இல்லாமல் குழந்தைகள் உறங்கி சென்று விடுமா. 28 கோடி மக்களுக்கு உணவு இல்லை என்று நாங்கள் சொல்லவில்லையே நீங்கள் தானே சொன்னீர்கள். இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்று கூறினீர்கள். தற்போது எத்தனை கோடி பேருக்கு வேலைவாய்ப்புக்கு அளித்துள்ளீர்கள் பத்தாண்டுகள் முடிவடைய போகிறது. நான் பாரத் பெயர் மாற்றம் வேண்டாம் என்று சொன்னால் கேட்பார்களா? நீட் வேண்டாம் என்று கூறினேன் என்ஐஏ வேண்டாம் என்று கூறினேன். இந்தியாவின் அடையாளம் காந்தி நேரு மற்றும் அம்பேத்கர் இந்த மூன்று பேரும் தான் இந்தியாவின் அடையாளம்.

காந்தியை விட அதிக காலம் சிறையில் இருந்தது மோதிலால் நேரு அவர்கள் தான். பதினாறு வருடங்கள் சிறையில் இருந்தபோது கழிவறை கூட இல்லாமல் மண் சட்டி பாத்திரத்தில் தான்  உபயோகப்படுத்திக் கொண்டு சிறையில் இருந்தனர்.  ஒரு நாட்டின் விடுதலைக்காக 16 ஆண்டுகள் சிறையில் இருந்தார் என்றால் அது தானே அடையாளம் அதற்கு தானே சிலை வைத்திருக்க வேண்டும். இந்த நாட்டை தாண்டி நீ வேற நாட்டிற்கு செல் பங்களாதேஷ் பாகிஸ்தான் மலேசியா சிங்கப்பூருக்கு சென்று கேட்டுப் பாருங்கள் இந்தியாவின் அடையாளம் யார் என்று காந்தியா நேருவா அம்பேத்கரா இல்லை வல்லபாய் பட்டேலா என்று. ஏன் வல்லபாய் பட்டேலுக்கு 3 ஆயிரம் கோடியில் சிலை வைத்தீர்கள்.

-விளம்பரம்-

ஆர் எஸ் எஸ் அமைப்பு மீது இருந்த தடையை விலக்கு அதனால் தான் வல்லபாய் பட்டேலுக்கு சிலை வைத்திருக்கிறீர்கள். அவர்களது கோட்பாடு அதுதான் பாரதம் என்று கொண்டு வர வேண்டும் ஒரே மதம் கொண்டு வர வேண்டும் மொழி கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றன என்று அவர் கூறியிருந்தார். மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை பற்றியும் காவிரி நீர் ஒதுக்கீடு பற்றி பேசினார். உங்களுடைய கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி மீது இருக்கின்றார்கள் உங்கள் தமிழகத்திற்கு உரிய நீரை வழங்க அவர்களிடம் அழுத்தம் கொடுத்து தர மறுக்கிறார்கள்.

அவர்கள் அவர்கள் மாநிலத்திற்கு உண்மையாக இருக்கின்றார்கள் ஆனால் நீங்கள் உங்களுடைய மாநிலத்திற்கு எவ்வாறு இருக்க வில்லை. கட்சதீவை தார வார்த்தையின் கூட்டணியில் இருப்பீர்கள் ஆனால் இங்கு வந்து கட்சத்தில் மீட்டெடுப்பை என்று கூறி வருகிறீர்கள். சீனாவிடம் எல்லை பிரச்சினை பற்றி பேசுவீர்கள் ஆனால் பாகிஸ்தானிடம் சண்டைக்கு செல்வீர்கள் ஏனென்றால் சீனா அவர்களிடம் ராணுவம் பலமாக இருக்கின்றது என்றும் தமிழக ஆளுநர் ஆளுநர் ரவியின் சனாதன கோட்பாடு குறித்து விமர்சித்து பேசினார்.

Advertisement