நான் உயர்ந்த லட்சியங்களை நோக்கி வருகிறேன் ஆனா, நீ இரண்டு லட்சுமிய கொண்டு வருகிறாய் – விஜயலக்ஷ்மிக்கு சீமான் பதிலடி.

0
1307
- Advertisement -

சில தினங்களாகவே அரசியல் வட்டாரங்களில் பெரிதும் பேசப்பட்டு வருவது என்னவென்றால் சீமான் விஜயலட்சுமி பிரட்சனை தான். அது குறித்து சீமான் விஜயலட்சுமியின் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். விஜயலக்ஷ்மியின் குற்றச்சாட்டுக்கு குறித்து சீமான் அவர்களும் அவ்வபோது பதில் அளித்து வருகிறார். பிரண்ட்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி இந்த படத்தில் இவர் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்தார்.

-விளம்பரம்-

மேலும் இவர் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த நிலையில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் ஒன்று அளித்தார். நடிகை இந்த புகாரின் பேரில் ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் ஆறு மணி நேரம் கோயம்பேடு துனை கமிஷனர் உமையாள், நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை செய்தனர்.

- Advertisement -

சீமான்-விஜயலக்ஷ்மி பிரச்சனை:

இதனிடையே நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தன்னை மூன்று வருடமாக காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ளவதாக சொல்லி தற்போது மறுக்கிறார் என்று கொள்வதாக புகார் செய்திருந்தார். இது தொடர்பாக விஜயலக்ஷ்மி வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. ஒரு கட்டத்தில் விஜயலக்ஷ்மி தற்கொலைக்கு கூட முயன்று இருந்தார். ஆனால், சமீப காலமாக சீமானை பற்றி எந்த விஷயத்தையும் பேசாமல் இருந்து வந்த விஜயலக்ஷ்மி சமீபத்தில் சீமான் மீது போலீசில் புகார் அளித்திருக்கிறார். அது குறித்து நேற்று மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு அதன் பின் விஜயலட்சுமி மகிழ்ச்சியாக வெளியே வந்தார்.

விஜயலட்சுமி குறித்து சீமான் பேசியது:  

ஊட்டியில் பத்திரிக்கையாளரிடம் சீமான் கூறியது “நீங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் நான் சட்டப்படி அது சந்திப்பேன். நான் கோடி கனவுகளுடன் ஓடிக் கொண்டிருக்கிறேன். நாம் தமிழர் என்கிற கட்சி கருவறையிலிருந்து பிறந்தது அல்ல அது பிணவறையில் பிறந்தது.  நீங்கள் அனைவரும் கூட்டாக கூட்டணி வைத்து தேர்தல் சந்திக்கிறீர்கள் ஆனால் நான் இதுவரை ஒரு முறை கூட கூட்டணி வைத்ததில்லை. கருத்தால் மோதினால் நீங்களும் கருத்தால் தான் வாழ வேண்டும் அதை விட்டுவிட்டு அவதூறு  பரப்ப கூடாது.

-விளம்பரம்-

நான் உயர்ந்த லட்சியங்களை தூக்கிக் கொண்டு வருகிறேன் ஆனால் நீ இரண்டு லட்சுமியை தூக்கிக் கொண்டு வருகிறாய். அரசியல் தளத்தில் நிகழ்த்துவதற்காக நீங்கள் கையில் எடுத்துள்ள கருவி அது மிகவும் கேவலமான செயல். சமூக மரியாதைக்கும் மனித மாண்பிற்க்கும் ஒரு கண்ணியத்திற்கும் நான் அமைதியாக இருந்து வருகிறேன். என்னுடைய மௌனத்தாலே அந்தப் பெண் சொல்வது எல்லாம் உண்மை என்று நீங்கள் நம்புகிறீர்கள்.

என் மீது புகார் அளித்தது போல அவர்கள் இன்னும் 10 பேர் மீது புகார் அளித்துள்ளனர் அதற்கான வீடியோவும் என்னிடம் உள்ளது. அந்த வீடியோவை பத்திரிகையாளர்களிடம் காட்டினார் சீமான். ஊடகங்கள் தான் இதைனை பெரிதாகி வருகின்றனர். அதில் உங்களுக்கு ஆனந்தம் இருக்கிறது. அந்த வீடியோவை விஜயலட்சுமி கூறுவது என்னவென்றால் கர்நாடகா நடிகர் ஜெகதீஷ் என்னை ஏமாற்றியதாகவும்  கூறியுள்ளார். அவர் பாஜகவை எம்பியாக இருந்து வருகிறார்.” இது போல தான் விஜயலட்சுமி செயல்பட்டு வருகிறார் என்றும் சீமான் கூறினார்.

Advertisement