என் உயிரை காப்பற்றியதே கமல் தான், மாசம் மாசம் மாத்திரை வந்துடம் – இறப்பதற்கு முன் ஆர் எஸ் சிவாஜி அளித்த பேட்டி.

0
945
RSShivaji
- Advertisement -

இறப்பதற்கு முன்பு நடிகர் ஆர் எஸ் சிவாஜி அளித்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக இருந்தவர் ஆர் எஸ் சிவாஜி. இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இணை இயக்குனர், ஒலி வடிவமைப்பாளர், லைன் ப்ரொடியூசர் என பன்முகங்களைக் கொண்டவர். இவர் அதிகம் தமிழ் மொழி படங்களில் தான் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

குறிப்பாக, கமலஹாசன் மற்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சம்பந்தப்பட்ட படங்களில் இவர் அதிகம் நடித்திருக்கிறார். மேலும், இவர் அதிகம் நகைச்சுவை இடங்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு இவர் சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்திருந்த கார்க்கி படத்திலும் நடித்திருந்தார். இவர் தமிழ் சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

ஆர்.எஸ்.சிவாஜி நடித்த படங்கள்:

இவர் அபூர்வ சகோதரர்கள், மாப்பிள்ளை, குணா, மகளிர் மட்டும், பூவே உனக்காக, லிட்டில் ஜான், வில்லன், அன்பே சிவம், ஆய்த எழுத்து, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, குஸ்தி, உன்னை போல் ஒருவன், கணிதன், எட்டு தோட்டாக்கள், வனமகன், கோலமாவு கோகிலா, தாராள பிரபு, சூரரைப் போற்று போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் சின்னத்திரை தொலைக்காட்சிகளிலும் நடித்திருக்கிறார்.

ஆர்.எஸ்.சிவாஜி மரணம்:

கடைசியாக இவர் நடித்திருந்த படம் லக்கி மேன். இந்த படம் நேற்று தான் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் யோகி பாபு நடித்திருக்கிறார். இந்த படத்தை பாலாஜி வேணுகோபால் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ரேச்சல் ரபேக்கா, வீர பாபு , அப்துல் அலி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இன்று காலை திடீரென்று உடல்நல குறைவு காரணமாக சிவாஜி காலமாக இருக்கிறார்.

-விளம்பரம்-

ஆர்.எஸ்.சிவாஜி அளித்த பேட்டி:

இவருடைய இறப்பு பலருக்குமே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இவருடைய மறைவிற்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ஆர் எஸ் சிவாஜி கமலஹாசன் குறித்து பேசி இருந்த பழைய வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், நான் உயிரோடு இருப்பதற்கு காரணமே கமல்தான். நான் எப்போதும் நன்றியை மறக்க மாட்டேன். என்னுடைய இதயத்தில் நான்கு ஓட்டைகள் இருந்தது. சிகிச்சைக்காக நான் அவரிடம் தான் உதவி கேட்டேன்.

கமல் செய்த உதவி:

எனக்காக அவர் எல்லா சிகிச்சை செலவையும் பார்த்துக்கொண்டார். அதேபோல் கொரோனா காலத்தில் மாத்திரை வாங்கவும் என்னிடம் காசு இல்லை. அவரிடம் கேட்க எனக்கு தயக்கமாக இருந்தது. இருந்தாலும், அவரிடம் நேராக சென்று உதவி கேட்டேன். அப்போது முதல் இப்போது வரை எனக்கு ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் இருந்து மாதம் மாத்திரைகள் வந்து கொண்டிருக்கின்றது. கமல் இல்லை என்றால் நான் இல்லை. எப்போதுமே மாத கடைசியில் போன் செய்து கேட்டு எனக்கு மாத்திரை வாங்கிக் கொடுப்பார்கள் என்று கூறியிருக்கிறார்.

Advertisement