வாக்கை யோசித்து போடுங்கள் – விஜயின் பேச்சுக்கு சீமானின் பதிலடி

0
2071
- Advertisement -

என்னுடைய ஓட்டை நடிகர் விஜயால் பிரிக்க முடியாது என்று சீமான் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இதனால் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

-விளம்பரம்-

அதோடு 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றார்கள். இது அரசியல் வட்டாரத்தில் கதிகலங்க வைத்தது. அதுமட்டுமில்லாமல் விஜய் அழைத்து அவர்களை பாராட்டியும் இருந்தார். இப்படி விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும் தங்களின் ஜனநாயக கடமையை செய்து வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் விஜய் தன் ரசிகர்களை அடிக்கடி சந்தித்தும் வருகிறார். விஜயின் இந்த சந்திப்பு எல்லாம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

விஜய் மக்கள் இயக்கம்:

அதோடு விஜய் சினிமாவை தாண்டி பொதுநல சேவைகளையும் செய்து கொண்டு வருகிறார். இதனால் இவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்களில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வழங்குகிறார். இந்த நிகழ்வு சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று இருக்கிறது.

மேடையில் விஜய் பேசியது:

மேலும், இந்த நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சால்வை அணிவித்து சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி அவர்களை கௌரவித்திருந்தார். மாணவர்களுடைய எதிர்காலம் குறித்தும், கல்வி குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்தார். குறிப்பாக அதில் அவர் மாணவர்களிடம் ஓட்டுக்கு காசு வாங்க கூடாது. இதை நீங்கள் உங்கள் பெற்றோரிடம் சொல்லுங்கள். எல்லா தலைவர்களையும் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். நன்றாக படியுங்கள், நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள். சோர்ந்து விடக்கூடாது எதிர்த்து தைரியமாக போராட வேண்டும் என்று பேசி இருந்தார்.

-விளம்பரம்-

சீமான் அளித்த பேட்டி:

விஜயின் இந்த பேச்சுக்கு பலரும் பாராட்டி இருந்தார்கள். இந்த நிலையில் இதற்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அளித்திருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, நாம் தமிழர் கட்சி நிகழ்ச்சி தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சீமான், நான் பேசுவதை தான் தம்பி பேசி இருக்கிறார். அது எனக்கு தான் வலிமை சேர்கிறது. அவர் பேசியது நியாயமான கருத்து. அதனை யார் பேசினாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். வாக்குக்கு பணம் கொடுப்பதில் தான் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கான விதை உருவாகிறது.

விஜய் குறித்து சொன்னது:

நடிகர் விஜய் குறிப்பிட்ட தலைவர்களையும் படிக்க வேண்டும், அவர்களை தாண்டி பல தலைவர்களையும் படிக்க வேண்டும் என்று சொன்னார். அதிமுக, திமுகவை பிடிக்காதவர்கள் நடிகர் விஜய்க்கு ஓட்டளிக்க முன் வருவார்கள். என் ஓட்டை நடிகர் விஜயால் பிரிக்க முடியாது. நடிகர் ஒருவர் அரசியலுக்கு வந்தால் அவரது ரசிகர்கள் அவர் மீது கொண்ட ஈர்ப்பால் தான் ஓட்டளிப்பார்கள். கொள்கை கோட்பாட்டை பார்த்து தான் மற்றவர்கள் அவருடன் கை கோர்ப்பார்கள். இந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டு மட்டும் தான் திரைப்படத்தில் நடிப்பவருக்கு நாடாளும் தகுதி என்ற நிலை இருக்கிறது. என்னுடைய கொள்கை என்பது நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பதுதான். காரணம் மொழி, இனம் நிலவள பாதுகாப்புக்காக போராடும் தகுதியானவர்கள் எடுபடாமலே போய் விடுகின்றார்கள் என்று கூறியிருந்தார்.

Advertisement