விக்ரமுடன் இணைந்து நடித்துள்ள மீனா, ஆனால் வெளிவரவே இல்லை – இதோ அந்த புகைப்படங்கள்.

0
1997
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் மீனா. இவர் கடந்த 1982 ஆம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுலகில் நடித்து வருகிறார். அதன் பின் கதாநாயகியாக நடித்து வந்த மீனாவுக்கு கடந்த 1993ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான எஜமான் படம் மீனாவின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது.

-விளம்பரம்-

அதன் தொடர்ந்து ஐபிஎல், வீரா, ராஜகுமாரன் போன்ற பல படங்களை நடித்த அன்றய ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தார் மீனா. மேலும், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். அதிலும், இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு,அஜித், உள்ளிட்ட பல பிரபலங்களுடன் பிசியாக நடித்து இருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படத்தில் மீனா நடித்திருந்தார். பல வருடங்களுக்குப் பிறகு மீனா அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது மீனா பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார்.

ஆனால் தென்னிந்திய சினிமாவில் பல நடிகர்களுடன் நடித்த மீனா இதுவரையில் சேர்ந்து ஒரு நடிகருடன் சேந்து நடிக்காமல் இருந்தார். அது வேறு யாரும் இல்லை சியான் விக்ரமுடன் தான். ஆனால் சமீபத்தில் ஆல்பன் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மீனா நடிகர் விக்ரமுடன் இணைந்து ஆல்பத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார்.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகை மீனா அப்போது தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் கதாநாயகியாக இருக்கும் போது இவரும் சியான் விக்ரமும் இணைந்து “காதலிசம்” என்ற இசை ஆல்பத்தில் இணைந்து வேலை செய்ததாக சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது மீனா கூறுகையில் இந்த ஆல்பம் அந்த நேரத்தில் இருந்த சில சூழ்நிலைகளினால் வெளியிட முடியாமல் அப்படியே கைவிடப்பட்டதாக கூறினார்.

மேலும் அந்த அந்த சமயத்தில் ஆல்பங்கள் பிரபலமக இல்லை என்றும். அதானல் அப்போது இருந்த சூழ்நிலையில் ரசிகர்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது என்று தெரியவில்லை என்றும், இதனால் அந்த ஆல்பம் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவித்தார். ஆனால் தற்போது இருக்கும் தலைமுறைகள் அது போன்ற வேலைகளை சரியாக செய்வதுடன் அதனை பலம் வரவேற்கின்றனர் என்று குறிப்பிட்டியுள்ளார் நடிகை மீனா.

Advertisement