தன் உருவத்தை அசிங்கப்படுத்திய தொலைகாட்சிக்கு பிரபல நடிகை பதிலடி ! புகைப்படம் உள்ளே

0
3164
deesha-patani

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் திஷா படானி. இவர் தற்போது அங்கு முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். மேலும் தமிழில் தேனாண்டாள் பிலிம்ஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் சங்கமித்ரா படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் நியூஸ்24 தொலைக்காட்சி இவரை கிண்டல் செய்து ஒரு பதிவினை இட்டது. அதாவது சிறுவயதில் இருந்த திஷா படானியின் புகைப்படத்தையும் தற்போது இருக்கும் அவரின் புகைப்படத்தையும் ஒரு சேர்த்து, எப்படி அசிங்கமாக இருந்த திஷா தற்போது இப்படி அழகாக மாறிவிட்டார் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தது நியூஸ்24 தொலைக்காட்சி நிறுவனம்

இதனை பார்த்த திஷா, ஆம் நான் 7வது படிக்கும் போது மேக்-அப் இல்லாமல், ஷார்ட் கவுன் அணியாமல் இருந்தேன். இதைவிட வேறு பிரேக்கிங் நியூஸ் உங்களுக்கு கிடைக்கவில்லையா?? என பதிலடி கொடுத்துள்ளார் திஷா படானி.