படத்துல இத்தனை ரகசியம் ஒளிந்திருக்கே கவனிசீன்களா.! செல்வராகவன் சொன்ன ட்விஸ்ட்.!

0
752
Ngk
- Advertisement -

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான NGK திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஒன்றரை ஆண்டிற்கு பின்னர் வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவு இல்லை என்பது தான் ரசிகர்களின் பெரும்பாலான விமர்சனமாக இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த படம் சூர்யா படம் போன்றும் இல்லை செல்வராகவன் படம் போன்றும் இல்லை என்று ரசிகர்கள் எண்ணி வருகின்றனர். ஆனால், இந்த படம் தற்போதைய அரசியல் களத்திற்கு ஏற்ற படம் என்றும் மற்றொரு தரப்பு ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த படம் குறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் படத்தின் இயக்குநர் செல்வராகவன், “என்.ஜி.கே படத்துக்காக நீங்கள் கொடுத்த பெரும் ஆதரவுக்கும், அன்புக்கும் நன்றி. நீங்கள் வெளிப்படுத்திய அன்பு அற்புதமானது.

உங்களில் சிலர் முன்கூட்டியே யூகித்தது போல் நந்த கோபாலன் குமரன் கதாபாத்திரத்தில் நிறைய ரகசியங்கள் நிறைந்த அடுக்குள் ஒளிந்துள்ளன. படத்தை உன்னிப்பாக பார்க்கும்போது அவற்றை கண்டுகொள்ளலாம். குடும்பத்துடனும், நண்பர்களோடும் என்.ஜி.கே படத்தை பார்த்து ரசிக்கவும்” என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement