பாலிவுட்டை போல தமிழ் சினிமாவிலும் எண்ணற்ற வாரிசு நடிகர் நடிகைகள் இருக்கிறார்கள். விஜய், சூர்யா துவங்கி அதர்வா கௌதம் கார்த்திக் வரை எண்ணற்ற வாரிசு நடிகர்கள் இருக்கிறார்கள் அந்த வகையில் நடிகர் அருண் விஜய்யும் ஒருவர். தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் விஜய் தமிழ் சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைக்காத திறமைமிக்க நடிகர்களில் நடிகர் அருண் விஜய்யும் ஒருவர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சினிமா துறையில் இருந்து வந்தாலும் பல வருடங்களாக ஹிட் படத்திற்காக காத்துக்கொண்டிருந்தார்.
நீண்ட வருடங்களாக தமிழ் சினிமாவில் அருண் விஜய் நடித்து வந்தாலும் அஜித்துடன் இவர் நடித்த “என்னை அறிந்தால்” படத்திலும் இவரது நடிப்பு ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த்து.அந்த படத்தில் இருந்தே தனது உடல் அமைப்பை மிகவும் பராமரித்து வருகிறார் நடிகர் அருண் விஜய்.சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘செக்க செவந்த வானம்’ படத்திலும் அசத்தலான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார். அருண் விஜய் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆர்த்தி மோகன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். மேலும், இவர்கள் இருவருக்கும் பூர்வி என்ற மகளும் அர்னவ் என்ற மகனும் இருக்கின்றனர்.
இதையும் பாருங்க : தனுஷ் – மாரி செல்வராஜ் இணையும் அடுத்த படத்தின் கதை இதுவா ? இன்னொரு பஞ்சாயத்த கூட்டிடுவாங்க போலவே.
இதில் 9 வயதாகும் அவரது மகன் கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் அருண் விஜய்யின் மகன் அர்னவ் சினிமாவில் களமிறங்க இருக்கிறார். அதுவும் சூர்யா தான் அவரது மகனை அறிமுகம் செய்ய இருக்கிறாராம். இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க, சரோவ் சண்முகம் இயக்குகிறார். இந்த படம் குறித்து சரோவ் சண்முகம் கூறுகையில்,ஆர்னவ் விஜய்யை திரையுலகுக்கு அறிமுகம் செய்வதில், மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறி இருந்தார்.
இப்படி ஒரு நிலையில் அருண்விஜய்யின் மாமனாரும் ஆர்த்தியின் தந்தையுமான தயாரிப்பாளர் என் எஸ் மோகன் காலமாகியுள்ளார். இவர் தமிழில் வா, மாஞ்சா வேலு, தடையற தாக்க போன்ற படங்களை தயாரித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது தந்தையின் இழப்பு குறித்து அருண் விஜய் மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.