புது வீடு வாங்கியாச்சு – Home Tour வீடியோ வெளியிட்ட செம்பருத்தி சீரியல் லட்சுமி அக்கா.

0
599
lakshmi
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்று விடுகிறது. ஆகையால் ஒவ்வொரு சேனலும் தங்கள் சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக சேனலும் வித்தியாசமான தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். சமீப காலமாக மக்கள் அனைவரும் சின்னத்திரையை விரும்பிப் பார்த்து வருகிறார்கள். இதனால் வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை நடிகர்களுக்கும் ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. அந்த வகையில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் சீரியல் செம்பருத்தி.

-விளம்பரம்-

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஐந்து வருடமாக மக்களிடையே அதிக ஆதரவும், அன்பும் பெற்ற சீரியல் செம்பருத்தி. இந்த சீரியல் ஜீ தமிழில் 2017 ஆம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இருக்கும் டாப் சீரியல்களில் ஒன்றாக செம்பருத்தி சீரியல் உள்ளது. இந்த சீரியல் தொடங்கியதில் இருந்து இப்போது வரை சீரியல் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் பின்னணியை கொண்ட தொடர்.

- Advertisement -

செம்பருத்தி சீரியல் லட்சுமி :

அதுமட்டுமில்லாமல் இந்த சீரியல் தெலுங்கு மொழியில் வெளிவந்த முத்த மந்தாரம் என்ற தொடரின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த சிரியலில் தொடக்கம் முதல் முடிவு வரையில் வில்லியாக இருப்பவர் லட்சுமி. இவர் முதன் இவர் முதன் முறையாக ராஜ் டிவியில் ஒளிபரப்பான “ஊர் வம்பு” என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். எனவே அந்த பெயர் அவரின் அடையாளமாக மாறிப்போனது.

அதற்கு பிறகு இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். திருமணத்திற்கு பின் இவர் கொஞ்சம் சீரியலில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டாலும் சமீபத்தில் முடிவடைந்த செம்பருத்தி சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்த சீரியலின் மூலம் இவர் வனஜாகவே மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பேரன்பு என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டிக் கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

புதிய அபார்ட்மெண்ட் :

இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அவரது மகனுடன் இணைந்து ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். லக்ஷயா ஜங்க்ஷன் என்ற பெயர் கொண்ட இந்த யூடியூப் சேனல் 7.5 லட்சம் சப்ஸ்கிரைபவர்கள் கொண்டுள்ளது. இந்த யூடியூப் சேனலில் வெளியூர் பயணங்கள், சமையல் குறிப்புகள் என பல வீடியோ பதிவுகளை பதிவுகளை லைக்குகளை அள்ளி வருகிறார் நடிகை லட்சுமி.

இந்த நிலையில் தான் நடிகை லட்சுமி திருமழிசை பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மென்டில் புது வீடு ஒன்றை விலைக்கு வாங்கி இருக்கிறார். அந்த வீட்டின் டூர் வீடியோவை தன்னுடை யூடியூப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் புது வீடு வாங்கிய லட்சுமிக்கு ரசிகர்கள் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement