அவன் ரொம்ப அதிர்ஷ்டசாலி.!முதன் முறையாக கையில் குழந்தயுடன் நெகிழும் சென்ராயன்.!

0
596
Senrayan

நடிகர் சென்ராயன், தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் தோன்றி இப்போது மக்களுக்கு பரிட்சயமான ஒரு காமெடி நடிகராக திகழ்ந்து வருகிறார். அதிலும் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்களில் பேராதரவை பெற்று மேலும் பிரபலமடைந்தார்.

ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த சென்ராயன் பின்னர் காமெடி நடிகராக வளம் வர துவங்கினார். நடித்த வட சென்னை படத்தில் நடித்திருந்தார். இவருக்கு சினிமாவை விட அதிகம் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். 

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது தனக்கு குழந்தை இல்லை அதனால் அனாதை குழந்தைகளை தத்தெடுக்க போவதாக கூறியிருந்தார் சென்றாயன். அதன் பின்னர் கமலும் கண்டிப்பாக அடுத்த  வருடத்திற்குள் உங்கள் மனைவிக்கு குழந்தை பிறக்கும் என்று கூறியிருந்தார். பின்னர் கமல் கூறிய வாக்கு பலித்தது போலவே சென்றாயன் மனைவி கருவுற்றார். 

இந்நிலையில் இந்த சந்தோசஷத்தை பகிர்ந்துள்ளார் சென்ராயன்,
வார்டுக்குள்ளே அவங்களைக் கூட்டிட்டுப் போனதும் அவ்வளவு பதற்றமா இருந்துச்சு. டாக்டர் உங்களுக்குப் பையன் பிறந்திருக்கான்னு சொல்லவும் ஆனந்தக் கண்ணீர் வந்துடுச்சு. என் பையனைக் கையில் தூக்கும்போது இந்த உலகமே எனக்குக் கிடைச்ச மிகப்பெரிய பொக்கிஷம் அவன்னு தோணுச்சு.

நான் பிறந்தப்போ எங்க ஊர்ல சிலருக்கு மட்டும்தான் தெரியும். என் பையன் பிறந்ததை எல்லோரும் கொண்டாடுறாங்க. அவன் ரொம்பவே அதிர்ஷ்டசாலி. தாயும், சேயும் நலமா இருக்காங்க. எல்லோருடைய பிரார்த்தனைக்கும் நன்றிகள்’ என்று கூறியுள்ளார்.