சிவகார்த்திகேயன், பிரபுதேவா.! செந்திலுக்கு அடித்த அதிஷ்டம்.! அடுத்து இந்த நடிகர் படத்தில் பாடுறாரா

0
280
senthil

சூப்பர் சிங்கர் செந்தில் மற்றும் ராஜலட்சுமி தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் லைம் லைட்டாக இருந்து வந்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களில் ஏகோபித்த ஆதரவை பெற்றார்கள். இசை புயல் ஏ ஆர் ரகுமான் கூட இவர்களது பாடல்களை கேட்டு மிகவும் மெய் சிலிர்த்து பாராட்டி இருந்தார்.

Singer-Senthil-Ganesh-with-ARRahman

விஜய் டிவியில் நடத்தப்பட்டு வந்த சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியின் பிரம்மாண்ட இறுதி போட்டி கடந்த ஜூலை ஜூலை 15 ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் செந்தில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். தற்போது இவருக்கு சினிமாவில் பாடும் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையில் பாடும் வாய்ப்பை பெற்ற செந்தில் காணேஷிற்கு பின்னர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘சீமாராஜா’ படத்தில் பாடும் வாய்ப்பை இசையமைப்பாளர் இமான் கொடுத்துள்ளார். இந்த தகவலை சில நாட்களுக்கு முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் இமான்.

அதுபோக பிரபுதேவா நடித்து வரும் ‘சார்லி சாப்ளின்’ படத்திலும் பாட வாய்ப்பு கிடைத்ததுள்ளது. இந்நிலையில் தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் புதிய படத்தில் சூர்யாவின் ஓபனிங் பாடலை பாடியுள்ளாராம். இந்த படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளாராம்.

surya

இந்த படத்திற்கு ‘புதுக்கோட்டை பிரபாகரன்’ என்று தலைப்பை வைத்துள்ளனர். லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக ஷாயிஷா நடிக்கவிருக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் ஆர்யா மற்றும் மோகன் லாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.