சொகுசு கார்கள், பங்களா வரிசையில் தற்போது சொகுசு கப்பல் வாங்கியுள்ள ஆல்யா மானசா, விலை இத்தனை கோடியா?

0
179
- Advertisement -

சீரியல் நடிகர்கள் ஆல்யா மானசா – சஞ்சீவ் சொகுசு கப்பல் ஒன்றை சொந்தமாக வாங்கி இருக்கும் விஷயம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் மிகப்பிரபலமான தம்பதிகளாக திகழ்பவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. இவர்கள் இருவருமே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள். இருவரும் இந்த சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் சிறிய இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ‘ராஜா ராணி 2’ சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் கலக்கி இருந்தார். அதேபோல் சஞ்சீவ் சன் டிவியில் பிரபலமாக சென்று கொண்டு இருக்கும் ‘கயல்’ சீரியலில் நடித்து வருகிறார்.

- Advertisement -

சஞ்சீவ் – ஆல்யா நடிக்கும் சீரியல்கள்:

அதற்கு பின் மீண்டும் நடித்து ஆல்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதோடு இவர்கள் தனியாக தொடங்கி இருக்கும் யூடுயூப் சேனலில் இவர்கள் வீடியோ பதிவிட்டு வருகிறார்கள். இவர்கள் பதிவிடும் வீடியோக்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. பின் மீண்டும் ஆல்யா அவர்கள் சன் டிவியில் சரேகம புரொடக்ஷன் தயாரித்த ‘இனியா’ தொடரில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

இனியா சீரியல் குறித்த தகவல்:

இந்த சீரியல் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து முடியும் வரை நல்ல வரவேற்பை பெற்று வந்தது. முதலில் இந்த சீரியலை வேறொரு இயக்குனர் இயக்கியிருந்தார். பின், ஸ்டாலின் என்பவர் இயக்கினார். இந்த சீரியலில் ஆல்யாவுக்கு ஜோடியாக ரிஷி நடித்து இருந்தார். சுமார் 646 எபிசோடுகள் வெற்றிகரமாக ஓடிய இந்த சீரியல் கடந்த நவம்பர், 2024 இல் முடிக்கப்பட்டது.

-விளம்பரம்-

ஆல்யா மானசா – சஞ்சீவ் வீடு:

இன்னொரு பக்கம், ஆல்யா – சஞ்சீவ் இருவரும் குடும்பம், குழந்தை, கேரியர் என்று பிசியாக இருக்கிறார்கள். அதோட இவர்களிடம் நிறைய சொகுசு கார்கள் இருக்கிறது. சமீபத்தில் கூட இவர்கள் இருவரும் கட்டிய பிரம்மாண்ட வீட்டிற்கு கிரகப்பிரவேஷம் செய்திருந்தார்கள். அதன் புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. இவர்களுக்கு ஏற்கனவே அப்பார்ட்மெண்ட் ஒன்றில் பிளாட் இருப்பது குறிப்பிடத்தக்கது.

2 கோடியில் போட் ஹவுஸ்:

இந்நிலையில், ஆல்யா மற்றும் சஞ்சீவ் தம்பதியினர் கேரளா மாநிலம் ஆலப்புழாவில் போட் ஹவுஸை வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த போட் ஹவுசின் விலை ரூபாய் 2 கோடி என்றும், அதில் அனைத்து விதமான வசதிகளும் உண்டு என்றும் கூறப்படுகிறது. விடுமுறையை கழிக்க பெரும்பாலானோர் போட் ஹவுஸையே விரும்பும் நிலையில், ஆல்யா இந்த தொழிலை தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது புது பிசினஸில் காலடி எடுத்து வைத்துள்ள ஆல்யா மானசா- சஞ்சீவ் தம்பதியருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Advertisement