பல சினிமா நடிகைகள் சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வந்ததை நாம் கேள்வி பட்டிருப்போம்.அதே போன்று தான் பல பிரபலமான படங்களில் நடித்து பின்னர் சின்னத்திரைக்கு வந்தவர் பிரபல சீரியல் நடிகை சந்தோஷி. முதன் முதலில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான பாபா படத்தில் அறிமுகமானார்.
அந்த படத்தில் மனிஷா கொய்றெல்லாவின் தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சந்தோஷி. அதன் பின்னர் மாறன், ஆசை ஆசையாய், மிலிட்டரி, அன்பே அன்பே ஜெய் போன்ற பல படங்களில் நடித்து வந்தார். மேலும், ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். சினிமாவில் நடித்து வந்த போதே சீரியலிலும் நடித்து வந்தார் நடிகை சந்தோஷி.
இதையும் பாருங்க : நண்பர்களுடன் பீர் குடித்துகொண்டே லைவ் சாட்டில் பேசிய மீரா மிதுன்.!
மேலும் 2000 ஆம் ஆண்டு சினிமாவில் நடிக்க வாய்பு கிடைக்காததால் சீரியளுக்கு தனது பயணத்தை மாற்றிக்கொண்ட சந்தோஷி சன் டிவி யில் வாழ்க்கை என்ற சீரியலில் நடிக்க துவங்கினர். அதன் பின்னர் அரசி,இளவரசி ,பொண்டாட்டி தேவை போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார்.
ஆனால், கடந்த சில மாதமாக இவரை சீரியலிலும் காண முடியவில்லை. அதற்கு காரணம் சந்தோஷி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இவருக்கு இரண்டாவது முறையாக குழந்தை பிறந்துள்ளது. அதுவும் இரட்டை குழந்தையாம்.