‘பன்றியும் அரசியலையும் சொல்லும் படம்’ – ரஞ்சித் தயாரித்துள்ள ‘சேத்துமான்’ – முழு விமர்சனம்.

0
637
Seththmaan
- Advertisement -

இயக்குனர் பா .ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில் மே 27-ம் தேதி வெளியாகி இருந்த படம் சேத்துமான். இந்த படத்தை அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் மாணிக்கம், மாஸ்டர் மகேந்திரன், பிரசன்னா, சுருளி, குமார், சாவித்ரி, அண்ணாமலை, நாகேந்திரன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு பிந்து மாலினி இசை அமைத்து இருக்கிறார் மற்றும் பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘வறுகறி’ சிறுகதைதான் ‘சேத்துமான்’ என்ற சினிமாவாக மாறி இருக்கிறது. மேலும், சோனி லைவ் இணையத்தில் வெளியாகி இருந்த சேத்துமான் படம் ரசிகர்களின் மத்தியில் வெற்றி அடைந்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

சேத்துமான் என்றால் சேத்தில் விளையாடி திரியும் பன்னி(மான்). படத்தில் நாமக்கல் அருகே உள்ள கிராமத்தில் கூடை பின்னி சந்தையில் விற்று பணம் சம்பாதிக்கும் தொழில் செய்பவர் பூச்சியப்பன் என்ற தாத்தா. இவர் தனது பேரன் குமரேசன் உடன் வாழ்ந்து வருகிறார். மாட்டுக்கறியை சாப்பிட்டதால் ஆதிக்க சாதி வெறியர்களால் குமரேசன் தாய், தந்தை கொல்லப்படுகிறார்கள். பின் குமரேசன் தன் தாத்தாவின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார். மேலும், பேரனை நன்றாக படிக்க வைத்து உயர்ந்த அதிகாரியாக உருவாக்கும் லட்சியத்தோடு போராடி வருகிறார் பூச்சியப்பன் தாத்தா.

இதையும் பாருங்க : ஆம், அவர் தலைமறைவாக இருந்த போது சந்தித்தேன், அவர் சொன்னதை வைத்து தான் நாயகன் கிளைமேக்ஸ்ஸை வைத்தேன் – முதன் குறையாக மேடையில் ஒப்புக்கொண்ட மணிரத்னம்.

- Advertisement -

அந்த ஊர் பெரிய பண்ணையாரான வெள்ளையனுக்கு பூச்சியப்பன் தாத்தா உதவியாக இருக்கிறார். அவர் சொல்வதையெல்லாம் செய்கிறார். ஒருநாள் பண்ணையாரும் அவரது குழுவும் இணைந்து சேத்து மான் (பன்றி) கறி சாப்பிட ஆசைப்பட்டு ரங்கனிடம் வாங்குகின்றனர். அதை சுவையாக சமைத்து கொடுக்கிறார் பூச்சியப்பன் தாத்தா. அப்போது உருவாகும் பிரச்சனையால் பலவிதமான அசம்பாவிதம் நடக்கிறது. அது என்ன? இதனால் பூச்சி அப்பனுக்கு என்ன ஆனது? தன்னுடைய பேரனை பூச்சியப்பன் நல்லபடியாக படிக்க வைத்தாரா? என்பது தான் படத்தின் மீதி கதை.

பூச்சியப்பன் என்ற கதாப்பாத்திரத்தில் தாத்தாவாக மாணிக்கம் நடித்திருக்கிறார். இவர் ஒரு நடிகராக அல்லாமல் அந்த மண்ணின் மனிதராக வாழ்ந்திருக்கிறார். கேமரா முன் நடிக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் மிக இயல்பாக நடித்திருக்கிறார் மாணிக்கம். பின் குமரேசன் என்ற பேரன் கதாப்பாத்திரத்தில் அஸ்வின் என்ற சிறுவன் நடித்திருக்கிறார். இவரின் அளவான நடிப்பு, தாத்தா மீதான அளவுக்கதிகமான பாசம் என இரண்டிலும் மக்களை கவர்ந்து இருக்கிறார். கோவக்கார பண்ணையாராக நடித்திருக்கும் பிரசன்னா பாலச்சந்திரன் அசத்தி இருக்கிறார்.

-விளம்பரம்-

இவர்களுடன் படத்தில் நடித்த நடிகர்கள் உடைய நடிப்பும் பாராட்டு கூடிய வகையில் இருக்கிறது. சமகாலத்திலும் ஜாதி பாகுபாடு ஏற்பட்ட மாற்றங்களையும் காண்பித்திருக்கிறார் இயக்குனர். இந்திய நாட்டின் 14 வது குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். ஆனாலும், நாட்டில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. மாட்டுக்கறியை உண்பவர்களை கேவலமாகப் பார்ப்பதோடு அவர்களை கொலை செய்யும் துணியும் ஆதிக்க ஜாதியினர், மனித மலத்தை உண்ணும் பன்றியின் கறியை சுவைப்பதற்காக எப்படி அலைகிறார்கள் என்பதையும், அவர்களின் பன்றிக்கறி பசிக்கு ஒரு பாமரனை எப்படி பலியாக்குகிறார்கள் என்பதையும் சொல்வது தான் ‘சேத்துமான்’ படத்தின் கதை.

மாட்டுக்கறி அரசியல் ஒரு பக்கம், பன்றிக்கறி ருசி மறுபக்கம் இருந்தாலும், தாத்தா – பேரனின் பாசப்போரட்டம் இந்த இரண்டு பக்கங்களையும் அழகாக இயக்குனர் காண்பித்து இருக்கிறார்.
சாக்கடைக்குள் உழலும் ‘சேத்துமானின்’ கறி மட்டும் வேண்டும். அதை வளர்க்கிற மனிதர்கள் வேண்டாம் என்கிற முட்டாள் புத்தியில் ஆதிக்க சாதி மக்கள் வாழ்வது ஏன்? என்பது போன்ற கேள்விகளை இந்த படம் எழுப்பி இருக்கிறது. இப்படி பல விஷயங்களை அழுத்தமாக பதிவு செய்திருந்தாலும் ஏதோ சில இடங்களில் குறைபாடுகள் இருக்கிறது.

பிளஸ்:

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது.

மாட்டுக்கறி அரசியல் குறித்து தெளிவாக காண்பித்திருக்கிறார் இயக்குனர்.

கிளைமாக்ஸ் காட்சி யதார்த்தமாக இருக்கிறது.

மைனஸ்:

கொஞ்சம் காமெடி இருந்திருக்கலாம்.

சில இடங்களில் லாஜிக் குறைபாடுகள் இருந்தது.

அழுத்தமான கதையை இன்னும் கொஞ்சம் ஆழமாக சொல்லியிருக்கலாம்.

மற்றபடி ஒரு சமூக விழிப்புணர்வு படமாக சேத்துமான் இருக்கிறது.

மொத்தத்தில் சேத்துமான் – சினிமாவை ரசிக்கும் ரசிகன் ருசிப்பான்.

Advertisement