10 பேரு என் வீட்டுக்கு வந்துட்டாங்க, கேப்டனுக்கு போன் பண்ணேன், அதுக்கு அப்புறம் – ஷாம் உருக்கம்.

0
569
Sham
- Advertisement -

நடிகர் ஷாம் சமீபத்தில் கொடுத்திருந்த பேட்டியில் விஜயகாந்த் பற்றிய சுவாரசிய தகவலை கூறியுள்ள வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இருக்கும் சாக்லேட் பாய் வரிசைகளில் இடம்பிடித்த நடிகர் ஷாம். தமிழில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான 12பி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் 12பி ஷாம். 12பி படத்திற்கு முன்னதாகவே விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தில் விஜய்யின் நண்பராக ஒரு சில காட்சிகளில் தலை காண்பித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இவர் 12பி படத்திற்கு பின்னர் எண்ணற்ற படங்களில் நடித்திருக்கிறார். பின் இடையில் இவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு படங்களில் நடிப்பதற்கு அதிக கவனம் செலுத்தி வந்த இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும், இவர் சமீப காலமாக குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் பார்ட்டி என்ற படத்திலும் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

வாரிசு படத்தில் ஷாம் :

இந்த நிலையில் தான் இவர் தற்போது விஜய்யின் “வாரிசு” படத்தில் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படத்தை தில் ராஜு தயாரிக்க இயக்குனர் வம்சி படிப்பாள்ளி இயக்கியிருந்தார். மேலும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு சங்கீதா என பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த 11 ஆம் தேதி வெளியான விஜய்யின் வாரிசு படம் நல்ல விமர்சங்களை பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.

என்னை அடிக்க 10 ஆட்கள் வந்தனர் :

இந்த நிலையில் தான் நடிகர் ஷாம் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் விஜயகாந்த் பற்றிய சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில் ” எனக்கு ஒரு முறை தயாரிப்பாளர் ஒருவரால் பிரச்னை வந்தது. எனக்கு முழு சம்பளம் கொடுத்தால் மட்டுமே ஒரு படத்திற்கு டப்பிங் பேசுவேன் என்று சொன்னதால் அந்த தயாரிப்பாளர் 10 அடியாட்களை என்னுடைய வீட்டிற்கு மிரட்ட அனுப்பினார்.

-விளம்பரம்-

விஜயகாந்திற்கு போன் செய்தேன் :

இந்நிலையில் நான் விஜயகாந்த் அவர்களுக்கு போன் செய்து விஷியத்தை கூறினேன். உடனே விஜயகாந்த் நீங்க கவலை படாதீங்க என்று என்னுடைய போனை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டு தூங்க சொன்னார். பின்னர் என்னை மிரட்ட ஆட்களை அனுப்பிய தயாரிப்பாளருக்கு போன் செய்து “இனிமேல் இது ஷாம் பிரச்னை கிடையாது என்னுடைய பிரச்சனை” நடிகர் சங்கத்தின் பிரச்னை நான் பார்த்துக்கொள்கிறேன் கூறினார்.

உண்மையான மனிதர் :

மேலும் என்னை எந்த விஷியத்திலும் தலையிட வேண்டாம் அணைத்து விஷியத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி அதனை சொல்லியது போலவே சரி செய்தும் கொடுத்தார். கேப்டன் ஒரு உண்மையான மனிதர் என்று கூறினார் நடிகர் ஷாம். அதோடு எங்கே பார்த்தாலும் ஷாம் மதுரைக்காரன் நம்ம தம்பி என்று கூறுவார் என ஷாம் பேசியிருந்தார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement