எனக்கு பதிலா வேற ஒருத்தர வச்சி ஆளுங்கட்சி எதிரா வசனம்லா பேசி இருக்காங்க, நான் கலைஞர் டிவி சீரியல்ல வேற நடிக்கிறேன் – புலம்பும் கிடுகு பட நடிகர்.

0
589
Hraja
- Advertisement -

மூன்று நாட்களுக்கு முன்னர் தாமரை யூடியூப் சேனலில் “கிடுகு” என்ற திரைப்படம் வெளியானது. இப்படத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் கட்சியினர் பற்றியும், இதர கட்சியினர் பற்றியும் கடுமையாக விமர்சிக்கும்படி சில கருத்துக்களும், காட்சிகளும் இருந்துள்ளன. இந்த படமானது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில் இப்படத்தில் முக்கிய நடித்திருந்த பிர்லா போஸ் அவர்களிடம் பிரபல செய்தி ஊடகம் பேட்டி எடுத்து இருந்தது. அந்த பேட்டியில் அவர் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகளை கூறியிருந்தார்.

-விளம்பரம்-

அவர் பேசுகையில் “என்னை கதாநாயகன் என்று கூறினார்கள் ஆனால் படத்தின் கதையா முழுமையான என்னிடம் சொல்லவில்லை. பொதுவாக குணச்சித்திர கதாபாத்திரத்தின் படத்தில் வரும் கதையை போல குற்றத்ததை தட்டி கேட்பது என்று தான் என்னிடம் கூறினார்கள். நானும் இது பல இடங்களில் நடப்பது தான் என்று இருந்து விட்டேன். அதற்கு பிறகு நான் படப்பிடிப்பு நடக்கும் வேளாங்கண்ணிக்கு சென்றேன். ஆனால் அங்கே எதுவும் முறைப்படி நடக்கவில்லை. அந்த இடமே அசௌகாரியமாகத்தான் இருந்தது.

- Advertisement -

நான் கதாநாயகன் என்று கூறினார்கள் :

நான் பல காலமாக சீரியல்கள், ரியாலிட்டி ஷோ என சின்னத்திரையில் மட்டுமே நடித்தால் நான் இப்படியெல்லாம் நடிக்க மாட்டேன் என கூற மாட்டேன். ஆனால் சித்தாந்தம் பற்றி எதிர்மறையாக பேச எனக்கு விருப்பம் இல்லை. அப்படி யாரையும், ஏவற்றையும் தாக்கி பேசும் சினிமா முதலில் சினிமாவாகவே இருக்காது. ஆனாலும் அவர்கள் சொல்லும் தேதியில் நடித்து கொடுத்தேன், வசனம் என்று சிலவற்றை கொடுத்தார்கள் ஆனால் அவை அரைகுறையாக இருந்தது. சொல்லப்போனால் நான் நடிப்பதற்கு முன்னர் பேசிய சம்பளத்தை கூட அவர்கள் முழுமையாக தரவில்லை.

இது நியாயம் கிடையாது :

இப்படி கதாநாயகன் என்று கூறி அழைத்த எனக்கே எதுவும் தரவில்லை என்றால் மற்ற நடிகர்களின் நிலைமை உங்களுக்கே தெரியும். அதே போல டப்பிங் பேச கூட என்னை அழைக்கவில்லை. வேறு ஒரு நபரை வைத்து டப்பிங் செய்து தற்போது ஆளும் கட்சியை பற்றி திட்டி படமாக எடுத்து வைத்திருக்கின்றனர். நடிப்பதற்கு முன்னரே இவற்றை சொல்லியிருந்தால் நியாயம். ஆனால் சொன்னது ஒரு கதை எடுத்து ஒரு கதையாக இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் எனக்கு பதிலாக வேறொரு நபரை வைத்து முடித்திருக்கின்றனர்.

-விளம்பரம்-

நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் கிடையாது :

இந்த பிரச்னை சென்று கொண்டிருக்க “துணிவு” படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் நன்றாக பிரபலமானது இதனால் இந்த படத்திற்கு ப்ரோமோஷன் செய்ய அழைத்தார்கள். ஆனால் மீது சம்பளத்தை கேட்டதற்கு பேச்சு வேறு மாதிரியாக சென்றதினால் நான் விடிவிட்டேன். முதலில் படத்தின் கதையை கூறினால் யாரும் நடிக்க சம்மதிக்க மாட்டார்கள் என்று யாருக்கும் கதையை கூறவில்லை என இயக்குனரே ஒரு பேட்டியில் குறி இருக்கிறார். நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் கிடையாது. தற்போது கலைஞர் டிவியில் சீரியலில் நடித்து வருகிறேன்.

ஹெச்.ராஜா தான் ப்ரோமோஷன் செய்தார் :

இந்த சூழ்நிலை இப்படி ஆளும் கட்சியை பற்றி நான் அவதூராக பேசியதாக படம் எடுத்து வைத்திருக்கின்றனர். சமிபத்தில் இந்த படத்தை திரையரங்கில் சென்று பார்த்து ஆதரவு கொடுங்கள் என ஹெச்.ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஆனால் “கிடுகு” படம் அவரது யூடியூப் சேனலில் தான் வெளியானது. படத்தின் பின்னாடி இவ்ளோ நடந்திருப்பது அவருக்குத் தெரியுமான்னு தெரியல. நான் பல விஷியங்களை இந்த இடத்தில பேச விரும்பவில்லை. அவர்களிடம் நான் ஓன்று கேட்க வேண்டும் என்றால், அவர்கள் செய்த பாவத்தை எங்கே சென்று கழுவுவார்கள் என்று தான் கேட்பேன் என ஆதங்கத்தில் பேசினார் பிர்லா போஸ்.

Advertisement