காதலர் தினம் குணால் மரணத்தின் மர்மம் என்ன ?அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா ..

0
37104
actor-kunal
- Advertisement -

தமிழ் சினிமா திரை உலகில் “காதலர் தினம்” படத்தின் மூலம் மக்களிடையே அதிகமாக பேசப்பட்டவர் நடிகர் குணால்.நடிகர் குணால் மும்பையைச் சேர்ந்தவர். மேலும், தன்னுடைய கல்லூரிப் படிப்பையும் மும்பையிலேயே முடித்தார். இவர் மாடலிங்கும் செய்துவந்தார். இவர் தமிழ் மொழி தவிர இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார்.நடிகர் குணால் ஹிந்தியில் ‘தில் ஹை தில் மெய்ன்’ என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார்.இவர் காதலர் தினம், வருஷமெல்லாம் வசந்தம், புன்னகை தேசம், அற்புதம் பேசாத கண்ணும் பேசுமே, திருடிய இதயத்தை, உணர்ச்சிகள், நிலவினிலே, நண்பனின் காதலி போன்ற பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். கடைசியாக குணால் நடித்த படம் ‘நண்பனின் காதலி’ படம் தான்.இப்படி நல்லா போய்க்கொண்டு இருக்கும் நடிகர் குணால் வாழ்வில் அப்படி என்ன தான் நடந்தது? என்று இன்னும் பல கேள்விகளை இணையங்களில் எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

-விளம்பரம்-
Related image

மேலும்,நடிகர் குணால் அவர்கள் 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.அவருடைய மரணம் புரியாத புதிராகவே உள்ளது.இதனைத்தொடர்ந்து இவரைப்போலவே சிம்ரனின் தங்கை மோனலும் தற்கொலை செய்து கொண்டார். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இவர் மும்பையை சேர்ந்த அனுராதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை, பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால், திடீரென ஒருநாள் அனுராதா குணால் இடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.இதனை தொடர்ந்து குணால் மனம் நொந்து போயிருந்த நிலையில் மும்பையிலுள்ள ஓஷிவாரா என்ற பகுதியில் நடிகை லவீனா உடன் வசித்து வந்தார். மேலும், திருமணம் செய்வதற்காக இருவரும் நிச்சயம் செய்துகொண்டார்கள்.

- Advertisement -

நடிகை லவீனா இப்போது தான் சினிமா துறையில் நடிக்க ஆரம்பித்த புதுமுக நடிகை ஆவார். இந்நிலையில் நடிகர் குணால் திடீரென்று தற்கொலை செய்து கொண்டார்.அவர் தற்கொலை செய்வதற்கான காரணங்கள் தற்போது வரை மர்மமாகவே உள்ளன.மேலும், மருத்துவர்கள் அவர் உடலைப் பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். இதன் மூலம் குணால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதை உறுதி செய்தார்கள்.இவர் தற்கொலை குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.மேலும்,அவர்கள் கூறியது, காதல் பிரச்சினையால் தான் தற்கொலை செய்தார் என்று ஒருபக்கம் கூறி நடிகை லவினாவை கைது செய்து விசாரித்து வந்தார்கள் போலீசார்.

Image result for actor kunal family

பின்னர், அவரை விடுவித்தும் விட்டார்கள் திருமணத்தில் சிக்கல்கள் ஏற்பட்டதாலும்,தனக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து வராத இருந்த காரணத்தினாலும் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினார்கள்.இதனைத்தொடர்ந்து குணால் மரணம் பற்றி நெருங்கிய நண்பர்கள் கூறியது, காதலர் தினம் படத்திற்கு பிறகு சினிமாவில் பெரிய அளவு வரவேற்கப்படவில்லை என்றும், அதிக பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை என்றும் கூறினார்கள். அதோடு சில மாதங்களாகவே குணால் மன அழுத்தத்தில் இருந்தார் உறவினர்கள் கூறினார்கள்.

-விளம்பரம்-

ஆனால்,குணால் நடிகர் மட்டுமல்லாமல் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார் இதனை தொடர்ந்து தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் கூறி இருந்தார்கள்.இந்நிலையில் குணால் மரணத்திற்கு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம. நாராயணன், இயக்குனர், தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி ஆகியோர் அனைவரும் வந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். ஆகவே அவருடைய மரணம் குறித்து பல மர்மங்கள் மறைந்து இருக்கிறது என நெட்டிசன்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் நடிகர் குணால் அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படம் தற்போது கிடைக்கபெற்றுள்ளது.

Advertisement