என்னோட அண்ணன், என்னோட தளபதி ஷாருக்கான் பதிவிற்கு அட்லீ போட்ட கமன்ட் (பாலிவுட் போனாலும் இன்னும் இத விடல போல)

0
384
atlee
- Advertisement -

பீஸ்ட் படத்தின் ட்ரைலர் பார்த்து ஷாருக்கான் பதிவிட்ட பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் வெளிவந்த வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது தளபதி விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார்.

-விளம்பரம்-
beast

மேலும், இந்த படத்தின் அரபிக்குத்து பாடல், ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பாடல்கள் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் நடனமாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள். தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது. மேலும், இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருக்கிறார். அதோடு பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

பீஸ்ட் படத்தின் ட்ரைலர்:

இந்த படத்தின் ட்ரைலர் கூட சமீபத்தில் தான் வெளியாகி இருக்கிறது. ட்ரெய்லரில் ஒரு மால்லை பயங்கரமான தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள். இந்த தீவிரவாத கும்பலில் இருந்து விஜய் எப்படி மக்களைக் காப்பாற்றினார்? என்பது தான் படத்தின் சுவாரஸ்யமே என்று கூறப்படுகிறது. மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. மேலும், ட்ரைலர் வெளியானதில் இருந்தே வணிக வளாகத்தின் செட் ஒர்க் பற்றி சோஷியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

பீஸ்ட் படத்தின் ட்ரைலர் குறித்த தாவல்:

மேலும், பேஸ்ட் படத்தின் டிரைலர் வெளியானது தொடர்ந்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தளபதி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ள தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. பீஸ்ட் படத்தின் டிரைலரை பார்த்த ஷாருக்கான் சோசியல் மீடியாவில் அட்லியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இந்த ட்ரெய்லரை அட்லீ உடன் சேர்த்து பார்த்தேன். ரொம்ப சூப்பராக இருக்கிறது. அட்லி என்னைவிட விஜய்யின் தீவிர ரசிகராக இருக்கிறார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

ட்ரைலர் குறித்து ஷாருக்கானின் பதிவு:

ஷாருக்கானின் இந்த பதிவு சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஷாருக்கான். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் .அதுமட்டுமில்லாமல் இவருடைய படங்கள் எல்லாம் கோடிக்கணக்கில் வசூல் ஆகும். தற்போது அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

அட்லீ – ஷாருக்கான் கூட்டணி படம்:

இந்த படம் அதிரடி ஆக்சன் கதைக்களத்தை கொண்டது ஆகும். இந்த படத்திற்கு லயன் என்ற பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இடையில் இந்த படம் ட்ராப் ஆகி விட்டதாக இருக்கும் நிலையில் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் மூலம் அட்லியும் ஷாருக்கானுக்கு ஒன்றாக தான் இருக்கிறார்கள் என்றும், லயன் திரைப்படத்தில் மும்முரமாக இருக்கிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது. மேலும், டீஸ்ட் படத்தின் டிரைலரை ஷாருக்கானை பார்க்க வைத்தும், விஜய்யின் அடுத்தப் படத்திற்கு சிக்னல் கொடுத்து உள்ளதையும் பார்க்கும் போது அட்லி ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்து விட்டதாக திரை உலகினர் வட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.

Advertisement