பீஸ்ட் திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிலேயே ஏற்பட்ட சண்டை குறித்து பீஸ்ட் பட நடிகர் ஷாஜி சென் அளித்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். தற்போது தளபதி விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்துஇருக்கிறார்கள்.
மேலும், பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருக்கிறார். பீஸ்ட் படம் வெளியாகி பல நெகட்டிவ் விமர்சனங்கள் பெற்று வருகிறது. மேலும், எக்கச்சக்கமான நெகட்டிவான விமர்சனங்கள் வந்து இருந்தாலும் வசூலில் பீஸ்ட் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. வசூல் ரீதியாக பார்க்கும் போது இதற்கு முன்பு இல்லாத அளவு தொகையை பீஸ்ட் வசூலித்து இருப்பதாக சினிமா வட்டாரங்கள் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷாஜி சென் நடித்து உள்ளார்.
ஷாஜி ஷென் திரைப்பயணம்:
தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் ஷாஜி சென். இவர் பெரும்பாலும் பாடலாசிரியர் மற்றும் திரைப்பட எழுத்தாளராக தான் படங்களில் பணி புரிந்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் நடிகராக அறிமுகமானார். அதன்பின் மான் கராத்தே, துப்பறிவாளன் எனப் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது இவர் பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஷாஜி சென் அளித்த பேட்டி:
இந்நிலையில் பீஸ்ட் படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து ஷாஜி சென் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து உள்ளார். அதில் அவர் செல்வராகவனுடன் ஏற்பட்ட அனுபவம் குறித்து கூறியிருப்பது, நான் எப்போதும் சூட்டிற்கு நேரமாகவே சென்றுவிடுவேன். அதேபோல் தான் பீஸ்ட் படத்தின் முதல் நாள் சூட்டுக்கு நேரமாக சென்று விட்டேன். என்னுடைய கேரவனில் உட்கார்ந்து இருந்தேன். அந்த சமயம் எனக்கு ஒரு போன் வந்தது. அப்போது யாரும் இல்லை என்று நினைத்துக்கொண்டு சத்தமாக பேசிக்கொண்டு இருந்தேன். பின் திடீரென்று என்னுடைய கதவை தட்டும் சத்தம் கேட்டது.
செல்வராகவன் மேனேஜர் உடன் சண்டை:
கதவை திறந்தவுடன் ஒருவர், அவர் எவ்வளவு பெரிய இயக்குனர். நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? மெதுவாக பேச முடியாதா? என்று கோபமாக பேசினார். எனக்கு உடனே கோபம் வந்துவிட்டது. அங்கிருப்பது செல்வராகவன் என்றும், இவர் செல்வராகவனின் மேனேஜர் என்றும் எனக்கு தெரியாது. மெதுவாக பேசுங்கள் என்று சொன்னால் நான் மெதுவாக பேச போறேன், அதுக்கு எதுக்கு அவங்க பெரிய ஆளுங்கன்னு பேசுகிறீர்கள் என்று நான் சொன்னேன். இதுதான் எங்களுடைய முதல் அனுபவம். அந்த மேனேஜர் பண்ண வேலையால் எங்களுக்குள் அந்த பிரச்சினை நடந்தது.
வீடியோவில் 10 : 19 நிமிடத்தில் பார்க்கவும்
செல்வராகவன் குறித்து ஷாஜி சொன்னது:
பின் அவருக்கு என்று தனியாக ஒரு கேரவன் ரெடி பண்ணி கொடுத்தார்கள். அதேபோல் இந்த படத்திலும் நாங்கள் இருவருமே மோதிக்கொள்ளும் மாறி காட்சிகள் இருக்கும். அதனால் நாங்கள் இருவருமே தனி தனியாக உட்கார்ந்து கொண்டிருப்போம். காட்சி வரும்போது நடிப்போம். பின் நாங்கள் எங்களுடைய வேலையை பார்த்துக் கொண்டிருப்போம். இப்படித்தான் பீஸ்ட் படம் முழுவதும் சென்றது. படத்தை தவிர மீதி நேரங்களில் செல்வராகவன் புகை பிடித்துக் கொண்டிருப்பார். எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் பிடிக்காது என்பதால் நான் அவரிடம் அதிகம் பேசவே மாட்டேன் என்று கூறினார்.