அவரும் மனுஷன் தானே, அவருக்கு எப்படி வயிறு எரியும் – தனுஷ் விவகாரத்தில் தனுஷ் ஆவேசம்.

0
939
shakeela
- Advertisement -

ஒட்டுமொத்த தமிழகமே தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து தான் பேசிக் கொண்டிருக்கின்றது. சோசியல் மீடியாவை ஓபன் பண்ணினாலே போதும் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து பற்றிய கருத்துக்களும் வீடியோக்களும் தான் அதிகம் வந்து கொண்டிருக்கின்றது. கடந்த ஆண்டு முழுவதும் சோசியல் மீடியாவில் நடிகை சமந்தா- நாக சைதன்யா விவகாரத்து பற்றிய பேச்சு தான் அதிகம் போய் இருந்தது. இந்த சர்ச்சை முடிவதற்குள் நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து ரசிகர்கள் மத்தியில் பேரிடியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர் தனுஷ் திகழ்ந்து வருகிறார். தனுஷ் அவர்கள் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் சாதித்து வருகிறார்.

-விளம்பரம்-
Dhanush Announces Divorce From Rajinikanth's Daughter |POPxo

அதுமட்டும் இல்லாமல் இவர் ஹாலிவுட், பாலிவுட்டிலும் கொடி கட்டி பறந்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா , லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் தாங்கள் பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் சமூக வலைதளபக்கத்தில் அறிவித்து இருப்பது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து பற்றிய கருத்து:

தனுஷின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தனுஷ்- ஐஸ்வர்யா இருவருக்கும் நடுவில் என்ன நடந்தது? என்று தெரியாமல் பலரும் பல விதமாக வதந்திகளை பரப்பி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த விவகாரம் பற்றி நடிகை சகிலா பேசியிருக்கிறார். அதோடு தனுஷ் – ஐஸ்வர்யா பற்றி தவறாக விமர்சனங்களை செய்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து விஷயம் தான் இப்போது நாட்டுக்கு ரொம்ப முக்கியமா? இல்லை அவசியமா?

தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து சகிலா வீடியோ:

அது அவர்களுடைய பர்சனல் விஷயம். அதை தேவையில்லாமல் ஏன் கிளறுகிறீர்கள்? அவர்களே அதை தெளிவாக அறிவித்து விட்டார்கள். இருந்தும் தேவையில்லாமல் அவர்களுடைய வாழ்க்கையில் ஏன் மூக்கை நுழைக்கிறார்கள். அப்படித்தான் சமந்தா டைவர்ஸ் செய்தபோது அவரைப் பற்றி தேவையில்லாமல் தவறாக சொன்னீங்க. அதனால் அவருடைய மனம் எவ்வளவு ரணமாக இருக்கும். அதோடு சமந்தா மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தார். மேலும், உங்கள் வீட்டில் அக்கா அல்லது தங்கை டைவர்ஸ் செய்தால் இப்படித்தான் பேசுவீர்களா? இப்படி பேச உங்களுக்கு மனம் வருமா? எதிர் வீட்டு பையனுடன் காதல். அதனால் தான் டைவர்ஸ் ஆகிவிட்டது என வாய் கூசாமல் உங்களால் பேச முடியுமா?

-விளம்பரம்-

விமர்சித்தவர்களை வறுத்து எடுத்த சகிலா:

தனுஷ் குழந்தைகள் பற்றி நீங்க கவலைப்படாதீங்க. உங்கள் குழந்தைகளை நல்லா பாத்துக்கிறீங்களா? அதை முதலில் பாருங்கள். மற்றவர்களை பற்றி அப்புறம் பார்க்கலாம். உங்கள் குழந்தைகளை ஒழுங்காக வளர்த்துங்கள். பின் அவர்களுக்கு நடுவில் என்ன நடந்தது? என எதுவுமே தெரியாமல் நீங்கள் ஒன்று பேசாதீர்கள். சினிமாக்காரர்கள் என்பதால் அவர்களை பற்றி இப்படி எல்லாம் பேசுவீர்களா! இவர்களுக்கு மத்தியில் சிம்புவை ஏன் இழுக்கிறீர்கள்? அவர் யாரை கல்யாணம் பண்ண போறாருன்னு ஏன் இப்ப பேசுறீங்க. சூப்பர் ஸ்டாரும் ஒரு மனிதர் தான்.

வைரலாகும் சகிலா வீடியோ:

பெற்ற மகள் என்பதால் அவருக்கு எப்படி வயிறு எரியும். அதேபோல் கமல் மகள்களைப் பற்றி அவ்வளவு மோசமாக பேசுறீங்க. அவங்க அரைகுறை ஆடை போடுறாங்க என்றெல்லாம் சொல்கிறீர்கள். பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள். மற்றவர்களுடைய உடையையும் ஒழுக்கத்தையும் பற்றி பேசுவதற்கு முன் உங்களை சிந்தியுங்கள். சமந்தாவுக்கு நாக சைத்தன்யா 200 கோடி கொடுத்ததாக சொல்றீங்க. நீங்க போய் பாத்தீங்களா? அவங்க ரெண்டு பேர் பற்றியும் எனக்கு தெரியும். அதனால் நான் பேசலாம் என்று சகிலா கூறியிருந்தார். இப்படிப் பிறருடைய வாழ்க்கையை பற்றி விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஷகிலா பதிவிட்ட வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement