என் படத்த பொம்பளைங்களா பாத்தாங்க ஆம்பளைங்க தானா பாத்தாங்க – வெளுத்து வாங்கிய ஷகீலா.

0
962
shakeela
- Advertisement -

தென்னிந்திய திரை உலகில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்திருந்தார். பின் இவர்கள் இருவரும் பரஸ்பரமாக பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள். மேலும், பிரிவிற்கு பிறகு இருவரும் தங்களுடைய வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். தற்போது சமந்தா நிறைய படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டு வருகிறார். அந்த வகையில் இவர் கொண்டு காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் புஷ்பா. இந்த படத்தை சுகுமார் இயக்கியிருக்கிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படம் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

- Advertisement -

பாடல் மீது புகார் :

மேலும், இப்படத்தில் சமந்தா ‘ஒ சொல்றியா மாமா ஓஓ சொல்றியாமா’ என்ற பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். சமீபத்தில் இந்த பாடல் வெளியாகி இருந்தது. அதோடு நடிகை சமந்தா முதன் முறையாக ஆடிய ஐட்டம் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடியுள்ளார். இந்த பாடல் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இருந்தாலும் ஆந்திராவை சேர்ந்த ஆண்களுக்கான அமைப்பு ஒன்று புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய அந்த பாடலை தடை செய்ய வேண்டும் என பிரச்சாரம் செய்து உள்ளார்கள்.

ஆண்கள் பாதுகாப்பு சங்க தலைவர் :

ஏன்னா, அந்த பாடலில் ஆண்கள் தவறான எண்ணம் கொண்டவர்கள் என்றும், இந்த பாடல் முழுவதும் ஆண்களை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது என்றும் கூறி உள்ளார்கள். இவர்களை தொடர்ந்து தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்க தலைவர் அருள் துமிலனும் இந்த பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் ஆண்களை கொச்சைப்படுத்தி எழுதப்பட்டுள்ளது என்றும், இதை கேட்டு சிறுவர்கள், இளைஞர்கள் மனரீதியாக பாதிக்கப்படுவார்கள் என்றும், ஒட்டுமொத்த ஆண்களையும் கொச்சைப்படுத்தும் விதமாக அமைந்துள்ள இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

-விளம்பரம்-

ஷகீலா வெளியிட்ட வீடியோ :

இப்படி இந்த பாடலுக்கு நடனமாடியுள்ள சமந்தாவுக்கு எதிராகவும் புகார் அளித்துள்ளார்கள். இந்நிலையில் இதுகுறித்து நடிகை சகிலா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, ‘ஓ சொல்றியா மாமா, ஓஹோ சொல்றியா மாமா’ இதுக்கு நீங்க என்ன சொல்றீங்க மாமா. இது ஒரு பாடல். இந்த பாட்டு எல்லோரும் கேட்டிருப்பீர்கள். பாட்டு நல்லா தான் இருக்கு. இதுல ஏன் இவ்வளோ பெரிய பிரச்சினையை? கொண்டு வருகிறார்கள். இதற்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தில் இருந்து இந்த பாடலை தடைசெய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். முதலில் ஆண்கள் பாதுகாப்பு சங்கம் இருப்பது எனக்கு தெரியாது.

அந்த சங்கத்தில் இருந்து இந்த மாதிரி எத்தனை கேசுகள் வந்திருக்கிறது என்று நான் கேள்விப்பட்டதும் இல்லை. உங்களுக்கு எதுக்கு பாதுகாப்பு என்று அதுவே எனக்கு தெரியவில்லை. மேலும், பாடல் வரிகள் எல்லாம் தப்பாக இருக்கிறது என்று குற்றம் சாட்டி இருக்கிறார்கள். இந்த பாடலை பாடியது ஆண்ட்ரியா, ஆடுவது சமந்தா இப்படி இந்த 2 பெண்களை தவிர மீதி அந்த பாடலை எடுத்தது அனைவருமே ஆண்கள் தான். அவர்களுக்கு எந்த ஒரு ஆட்சேபனை இல்லாத போது, உங்களுக்கு என்ன பிரச்சனை? அதேபோல் இது தான் ஆம்பள புத்தி என்று பாடலில் வந்ததை என்று குறை சொல்கிறீர்கள். பெண்கள் புத்தி பின் புத்தி என்று நிங்கள் சொல்கிறீர்கள்.

எவண்டி உன்ன பெத்தான் பெத்தான், பிட்டு படம் டி, 2 குண்டு மாங்காய் :

அதற்கு நாங்கள் என்ன கோபப்பட்டோமா? பெண்களை வைத்து எவ்வளவோ பாடல்களை பாடி இருக்கிறீர்கள். எவண்டி உன்ன பெத்தான் பெத்தான், பிட்டு படம் டி, 2 குண்டு மாங்காய் என்று இந்த மாதிரி சினிமாவில் எவ்வளவோ பெண்களை வைத்து பாடல் பாடி இருக்கிறார்கள். அதற்கெல்லாம் மாதர் சங்கம் புகார் எழுப்பி இருக்கா? பாட்டுக்கு தடை விதித்து இருக்கா? சொல்லப்போனால் அந்த பாடலை வைத்து ரோட்டிலும், பொது இடங்களிலும் பெண்களை கிண்டல் செய்கிறார்கள். இது எல்லாம் வைத்து மாதர் சங்கம் என்ன பிரச்சினை செய்கிறதா? சம்பந்தமே இல்லாமல் எதற்கு இப்படி எல்லாம் செய்கிறீர்கள். பாடலை பாடலாக நினையுங்கள். ஏதோ ஒரு பிரச்சனை செய்ய வேண்டும் என்று பண்ணாதீர்கள். இப்பதான் அந்த பொண்ணு விவாகரத்து எல்லாம் முடிஞ்சி சினிமாவில் நடித்துக் கொண்டு வருகிறார்.

இந்த நிலைமையில் திருப்பியும் அவளை ஏன் இப்படி கஷ்டப்படுத்துகிறீர்கள். அதோடு இந்த பாடலுக்கு அல்லு அர்ஜுன் ஆடியிருப்பார். உண்மையை சொல்லப்போனால் சமந்தா, அல்லு அர்ஜுனை தான் கேலி கிண்டல் செய்து பாடியிருப்பார் ஆடியிருப்பார். இதில் எல்லோரும் தங்களை அல்லு அர்ஜுன் ஆக நினைத்துக்கொண்டு பிரச்சினை செய்கிறீர்கள்? அவர்களுக்கே எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை. உங்களுக்கு எங்க வலிக்குது. ஒரு பாடலை ஒரு பாடலாக மட்டும் பாருங்கள். அதை ஒரு பெரிய பிரச்சனையாக கொண்டு வந்து கலவரத்தை ஏற்படுத்த நினைக்காதீர்கள்.

நீதிமன்றத்திற்கும், நீதிபதிகளுக்கும் வேலையில்லையா?

இதற்கு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறீர்கள், புகார் அளித்துள்ளார் என்று சொல்கிறார்கள். நீதிமன்றத்திற்கும், நீதிபதிகளுக்கும் வேலையில்லையா? நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. அதை எல்லாம் விட்டு அவர்கள் இதற்கு தான் பதில் சொல்ல வேண்டுமா? ஏன் இப்படியெல்லாம் பண்ணுகிறீர்கள் என்று பேசியிருக்கிறார். இப்படி அவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement