வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீ திவ்யாவின் தோழியாக நடித்தவர் நடிகை ஷாலு சம்மு. அந்த படத்தில் காமெடி நடிகர் சூரியின் காதலியாக நடித்திருந்தார். சமீபத்தில் ஷாலு ஷம்மு ஒரு ஆண் நபருடன் சால்சா நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பரவி வந்தது. மேலும், அந்த வீடியோவில் இருக்கும் நபரை தான் ஷாலு காதலிக்கிறார் என்றும் செய்திகள் பரவியது.
மேலும்ம், விஜய் தேவர்கொண்டா படத்தில் நடிப்பதற்காக தன்னை ஒருவர் படுக்கைக்கு அழைத்தாகவும், அதனை வெளியில் சொன்னால் எந்த பயனும் இல்லை என்பதால் அதனை நான் சொல்லவில்லை என்றும் கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்த ‘காதல் மன்னன் ‘ திரைப்படத்தில் தான் ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்துள்ளதாக ஷாலு ஷம்மு கூறியுள்ளார்.
அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் திரை வாழ்க்கையில் காதல் மன்னன் திரைப்படம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். சரண் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் அஜித்தின் சினிமா வாழ்க்கைக்கு மாபெரும் திருப்பு முனையாக அமைந்திருந்தது. இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் ஷாலு ஷம்மு.
சமீபத்தில் தனியார் வெப் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்தார் ஷாலு, அப்போது அவரிடம் நீங்கள் தல ரசிகை என்று நாங்கள் கேள்வி பட்டோமே என்று கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதிலளித்த ஷாலு ஷம்மு, என்னுடைய அம்மாவிற்கு அஜித் என்றால் மிகவும் பிடிக்கும். நான் சிறு வயதாக இருந்த போது காதல் மன்னன் படத்தில் என்னை ஜூனியர் ஆர்டிஸ்டாக நடிக்க வைத்துள்ளார்கள்.
அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த திலோத்தம்மாவிற்கு நிச்சயதார்த்தம் நடப்பது போல ஒரு காட்சி வரும் அது தான் அவரின் முதல் காட்சியாக இருந்தது. அந்த காட்சியில் நானும் நடித்திருந்தேன் என்று கூறியுள்ளார். ஷாலு ஷம்மு கூறியதை அடுத்து அந்த காட்சியை முற்பட்டபோது அந்த காட்சியில் கதாநாயகி அருகில் பல பேர் நின்றுகொண்டிருக்கின்றனர். அதில் யார் ஷாலு ஷம்மு என்று உங்களால் முடிந்தால் கண்டு பிடியுங்கள்.