நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி கலாட்டாகள் நிறைந்த வறுத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீதிவ்யாவிற்கு தோழியாக படம் முழுவதும் அவருடன் நடித்தவரின் பெயர் ஷாலு சம்மு.
நல்ல தமிழ் நிற தோற்றத்தை உடைய இவர் நாகர்கோவிலில் பிறந்தவர்.சென்னை எத்திராஜ் கல்லுரியில் படித்த இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பழகியாக ஒரு கிராமத்து பெண் போல நடித்திருந்தார். மேலும், அந்த படத்திற்கு பின்னர் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் காமெடி நடிகர் சதீஸின் காதலியாக நடித்திருந்தார்.
இந்த இரு படத்திலும் கிராமத்து குயிளாக தெரிந்த இந்த நடிகை நேரில் பார்த்தால் மிகவும் மாடர்ன் மங்கையாக இருக்கிறார்.சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்திலும் நடித்திருந்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஷாலு ஷம்மு ஆண் நண்பர்களுடன் நடனமாடும் இரண்டு விடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. அப்போது முதல் இவருக்கு சமூக வளைத்தளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் வந்துவிட்டனர். இந்த நிலையில் நீச்சல் குளத்தில் குளியல் போட்ட வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.